fbpx

உணவகங்களில் இதற்கு தடை தொடரும்…! வந்தது புதிய அறிவிப்பு…!

மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிக்கையின்படி டெல்லியின் ஒட்டுமொத்த காற்றுத் தரக் குறியீடு 213 ஆக இருந்தது. தரப்படுத்தப்பட்ட பதில் செயல்திட்டத்தின் மூன்றாம் நிலை அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து, ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு, குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது. இதைக் கருத்தில் கொண்டும், வானிலை முன்னறிவிப்புகளைக் கருத்தில் கொண்டும், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய காற்றின் தர மேலாண்மைக்கான ஆணையத்தின் துணைக் குழுக் கூட்டம் நடைபெற்றது.

டெல்லி மற்றும் புறநகர் பகுதிகளில் வரும் நாட்களில் காற்றின் தரக் குறியீடு கடுமையான அளவில் இருக்காது என இந்தக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. எனவே, மிகக் கடுமையான கட்டுப்பாடுகளை தளர்த்துவது எனவும் ஜிஆர்ஏபி-யின் மூன்றாம் நிலைக் கட்டுப்பாடுகளை தில்லி முழுவதும் உடனடியாக விலக்கிக் கொள்வது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

எனினும் ஜிஆர்ஏபி-யின் முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலை நடவடிக்கைகள் தொடர்ந்து அமலில் இருக்கும் என இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட அமைப்புகள் தொடர்ந்து தீவிரப்படுத்தி கண்காணிக்க வேண்டும் என இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலை நடவடிக்கைகளின் கீழ், சாலைகளை தினசரி அடிப்படையில் தூய்மைப்படுத்துதல், கட்டுமான தளங்களில் வழக்கமான ஆய்வு மற்றும் தூசி கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் கடுமையான அமலாக்கம், உணவகங்கள் மற்றும் திறந்தவெளி உணவகங்களில் நிலக்கரி / விறகுகளை அனுமதிப்பதில்லை, தனியார் போக்குவரத்தை குறைத்துப் பொதுப் போக்குவரத்தை ஊக்குவிக்கும் நோக்கில் தனியார் வாகன நிறுத்தக் கட்டணங்களை அதிகரிப்பது, டீசல் ஜெனரேட்டர்கள் பயன்பாட்டுக்கான கட்டுப்பாடுகள் போன்ற நடவடிக்கைகள் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

இந்தியாவின் மிகப் பழமையான வழக்கு..!! 72 ஆண்டுகளுக்குப் பிறகு முடிவுக்கு வந்தது..!!

Tue Jan 17 , 2023
இந்தியாவின் மிகப் பழமையான வழக்கு ஒன்று கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் 72 ஆண்டுகளுக்குப் பிறகு முடிவுக்கு வந்துள்ளது. 72 ஆண்டுகளாக நடைபெற்று வந்த பெர்ஹாம்பூர் வங்கி தொடர்பான வழக்கு கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் முடிவுக்கு வந்துள்ளது. இந்த வழக்கில் கொல்கத்தா உயர்நீதிமன்றம் கடந்த வாரம் தீர்ப்பு வழங்கியது. இந்த வழக்கு தற்போதைய தலைமை நீதிபதி பிரகாஷ் ஸ்ரீவஸ்தவா பிறப்பதற்கு ஒரு தசாப்தத்திற்கு முன்பே தாக்கல் செய்யப்பட்டது என்பது முக்கியமான விஷயம். இதற்கிடையே, பெர்ஹாம்பூர் […]
இந்தியாவின் மிகப் பழமையான வழக்கு..!! 72 ஆண்டுகளுக்குப் பிறகு முடிவுக்கு வந்தது..!!

You May Like