தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வில் முதல் 6 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு நடிகர் விஜய் ரத்தம் மற்றும் பரிசுகளை வழங்கி நேற்று கௌரவித்தார் அந்த விதத்தில் தொகுதிக்கு 6 பேர் வீதம் 1404 பேருக்கு விஜய் பரிசு வழங்கினார். அதில் 12-ம் வகுப்பு பொது தேர்வில் முழுமையான மதிப்பெண்களான 600 மதிப்பெண்களைப் பெற்ற திண்டுக்கல் ஐ சார்ந்த மாணவி நந்தினிக்கு வைர நெக்லஸை அவர் பரிசாக வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வட்டம் நெய்க்காரங்குளம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்த லட்சுதா என்ற மாணவி நடந்து முடிந்த 10ம் வகுப்பு பொது தேர்வில் 496 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். மேலும் அவர் தமிழக அளவில் 2வது இடத்தை பெற்ற மாணவி ஆவார்.
ஆனால் வேதாரண்யம் தொகுதியில் இந்த மாணவியை விட்டுவிட்டு வேறு மாணவர்களுக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் தேர்ந்தெடுத்து அழைப்பு விடுத்து சென்றதாக கூறப்படுகிறது. விஜய்யிடம் இருந்து அழைப்பு வரும் என்று காத்திருந்த மாணவி கவலை அடைந்திருக்கிறார். இது தொடர்பாக அவர் தெரிவித்ததாவது மாநில அளவில் 2ம் இடம் பிடித்ததால் நாகை மாவட்ட ஆட்சியர் என்னை அவரது அலுவலகத்திற்கு அழைத்து சால்வை அணிவித்து பாராட்டினார்.
ஆனால் தற்போது விஜய் சார் அதிக மதிப்பெண்களை பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்குவதாக அறிவித்ததால் தனக்கும் அழைப்பு விடுக்கப்படும் என்று எதிர்பார்த்திருந்தேன். ஆனாலும் எனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை இதை ஏமாற்றம் அளிக்கிறது என்று அவர் கூறியிருக்கிறார்.