fbpx

வாவ்…! பத்திரப்பதிவுத்துறையில், நவீன தொழில்நுட்ப மேம்பாடு “ஸ்டார் 3.0 மென்பொருள் திட்டம்” தொடக்கம்…!

பத்திரப்பதிவுத்துறையில், நவீன தொழில்நுட்ப மேம்பாடு “ஸ்டார் 3.0 மென்பொருள் திட்டம்” குறித்த தேசிய அளவிலான தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் கலந்து கொண்ட கருத்தரங்கை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார்.

பதிவுத்துறையில் கணினிமயமாக்கல் என்கிற “ஸ்டார்” திட்டம் 6.2.2000 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்களால் முன்னோடி திட்டமாக தொடங்கி வைக்கப்பட்டது. முதன்முதலில் 23 அலுவலகங்களில் தொடங்கப்பட்ட கணினிமயமாக்கல் திட்டம் பின்னர் படிப்படியாக அனைத்து பதிவு அலுவலகங்களுக்கும் விரிவாக்கப்பட்டது. நிர்வாக வெளிப்படைத்தன்மை மற்றும் பொதுமக்களிடம் எளிய அணுகுமுறை ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு புதிய மேம்படுத்தப்பட்ட வலை அடிப்படையிலான ஸ்டார் 2.0 என்ற மென்பொருள் தற்போது பயன்பாட்டில் உள்ளது என அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் பதிவுத்துறையில் தனித்துவமான வசதிகளுடன், அதி நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய இணையவழி பதிவை எளிமையாக்கும் விதமாக ஸ்டார் 3.0 என்னும் புதிய மென்பொருளில் செயற்கை நுண்ணறிவை கூடுமானவரை பயன்படுத்துதல், மனித தலையீடின்றி தானாகவே சேவைகளை அளித்தல், பொதுமக்கள் அலுவலகம் வராமலேயே சேவைகளை பெறுதல், தற்போதைய இணைய தளத்தை புதுப்பித்து எளிமையாக்கல், மென்பொருளை அதிவேகமாக இயங்க வைக்கும்.

மேலும் அனைத்து நிலைகளிலும் புதிய வன்பொருள் வழங்குதல், கிளவுட் தொழில் நுட்பம், கைபேசி செயலி உள்ளிட்ட சேவைகள் தொடர்பான கருத்துக்களையும் அவர்தம் மென்பொருள் சார்ந்த தொழில்நுட்ப தீர்வுகளை எவ்வாறு ஸ்டார் 3.0 திட்டத்திற்கு வழங்கி மெருகேற்றலாம் என்பதை தெரிவிக்க கருத்தரங்கில் கலந்து கொண்ட தேசிய அளவிலான தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களின் பிரதிநிதிகளிடம் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

Vignesh

Next Post

சென்னையில் கரையை கடக்கும் புயல்!… வேதாரண்யம் முதல் கல்பாக்கம் வரை பெரும் தாக்கம் இருக்கும்!

Fri Dec 1 , 2023
மிக்ஜாம்’ என பெயரிடப்பட்டுள்ள புயல் சென்னைக்கு அருகில் கரையைக் கடக்கலாம் என்றும், கல்பாக்கம் துவங்கி வேதாரண்யம் வரையிலான கடலோர பகுதிகளில், அதன் தாக்கம் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவ மழை கடந்த இரண்டு வாரங்களாக, தமிழகத்தில் தீவிரமாக பெய்து வருகிறது. கன்னியாகுமரி முதல் சென்னை வரை, பெரும்பாலான மாவட்டங்களில் மழை பரவலாக பெய்து வருகிறது. இந்நிலையில், வங்கக்கடலில் புதிய புயல் சின்னம் உருவாகியுள்ளது. […]

You May Like