fbpx

மாநிலம் முழுவதும் ஊரடங்கு..!! 5 நாட்களுக்கு இன்டர்நெட் சேவை கிடையாது..!! பற்றி எரியும் மணிப்பூர்..!!

மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியினர் மக்களுக்கும் பழங்குடி அல்லாத சமூகத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. சிறு மோதல்களாக ஆரம்பித்த இந்நிகழ்வுகள் மாநிலம் முழுவதும் கலவரமாக மாறியுள்ளது. வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பல்வேறு பழங்குடியின பிரிவைச் சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் மெய்டீஸ் பிரிவைச் சேர்ந்த பழங்குடி அல்லாத சமூகத்தினர் தங்களையும் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி கோரிக்கை வைத்துள்ளனர். மெய்டீஸ் பிரிவினரின் கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பழங்குடி பட்டியலின சமூகத்தை சேர்ந்த மக்கள் போராட்டத்தில் குதித்தனர்.

மாநிலம் முழுவதும் ஊரடங்கு..!! 5 நாட்களுக்கு இன்டர்நெட் சேவை கிடையாது..!! பற்றி எரியும் மணிப்பூர்..!!

மேலும், மாணவர்கள் அமைப்பினர் நடத்திய பேரணிக்கு பழங்குடி அல்லாத பிரிவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த எதிர்ப்பு மோதலாக மாறியது. இந்த மோதல் மணிப்பூர் மாநிலம் முழுவதும் பரவியது. பழங்குடியினர் அதிகம் வசிக்கும் மலையோர மாவட்டங்களில் வீடுகள், சாலைகளில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள், கடைகளுக்கு 2 தீ வைக்கப்பட்டன. மாநிலம் முழுவதும் வன்முறை பரவிய நிலையில், தமிழர்கள் அதிகளவில் வாழும் மோரோ கிராமத்திலும் வன்முறை வெடித்தது. இதில் 25-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளன. மோதல்களை தடுக்க காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் அதில் பொதுமக்கள் சிலர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமூக வலைதளத்தில் போலி வீடியோக்கள் பரவியதே கலவரம் வெடிப்பதற்கு முக்கிய காரணம் என கருதுவதால் 8 மலையோர மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இணைய சேவைகள் 5 நாட்களுக்கு முடக்கப்பட்டுள்ளன. கலவரத்தை கட்டுப்படுத்த ராணுவம் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. கூடுதலாக மத்திய பாதுகாப்புப் படைகள் விமானம் மூலம் மணிப்பூருக்கு புறப்பட்டு சென்றுள்ளன. இந்த கலவரம் தொடர்பாக பிரபல குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், ‘எனது மாநிலம் பற்றி எரிகிறது. தயவு செய்து மோடி, அமித் ஷா ஆகியோர் உதவுங்கள் ‘ என்று பதிவிட்டுள்ளார்.

Chella

Next Post

என்கிட்ட அழகான பொண்ணுங்க இருக்கு வரியா…..? உல்லாசத்திற்கு அழைத்த புரோக்கர் போலீசில் சிக்கியது எப்படி….?

Thu May 4 , 2023
கன்னியாகுமரி மாவட்டம் சுண்டன்பரப்பு கிராமத்தைச் சார்ந்தவர் செந்தில்குமார் (36) இவர் சுவாமிநாதபுரம் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த ஒரு வாலிபர் நைசாக பேச்சு கொடுத்தார். அதன் பிறகு தன்னுடைய வீட்டில் அழகான இளம் பெண்கள் இருக்கிறார்கள், 500 ரூபாய் கொடுத்தால் அவர்களுடன் உல்லாசமாக இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார். அவர் கூறியதை கேட்டு அதிர்ச்சி அடைந்த செந்தில்குமார் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தார். ஆகவே சம்பவ இடத்திற்கு […]
தனிப்பட்ட வாகனங்களில் இந்த ஸ்டிக்கரை ஒட்டக்கூடாது..! தமிழக டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு..!

You May Like