ஹரியானா அரசு சார்பில் காட்சிப்படுத்தப்பட்ட குடியரசு தின அலங்கார ஊர்தியில் மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடாவின் உருவச்சிலை இடம்பெற்று இருந்தது.
இன்று நமது நாட்டின் 76 ஆவது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. 1950 ஆம் ஆண்டு நாட்டின் அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டதை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் இந்த நாள் குடியரசு தின நாளாக கொண்டாடப்படுகின்றது. நாடு முழுவதும் மக்கள் குடியரசு தினத்தை வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.
தலைநகர் டெல்லியில், பிரம்மாண்டமான அணிவகுப்புகள், கலாச்சார கண்காட்சிகள் மற்றும் வண்ணமயமான மாநில அலங்கார ஊர்திகள் காட்சிப்படுத்தப்பட்டன. இந்த ஆண்டு குடியரசு தின அலங்கார ஊர்திகளுக்கான கருப்பொருள் என்ன? எந்தந்த மாநில ஊர்திகள் அணிவகுப்பில் பங்குகொள்ளும்? என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது இந்த ஆண்டு தமிழகத்திற்கான வாய்ப்பு வழங்கப்படவில்லை.
ஆந்திரப் பிரதேசம், பீகார், சண்டிகர், தாதர் நகர் ஹவேலி & டாமன் மற்றும் டையூ, கோவா, குஜராத், ஹரியானா, ஜார்கண்ட், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், பஞ்சாப், திரிபுரா, உத்தராகண்ட், உத்தரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகியவை பிரமாண்டமான குடியரசு தின அணிவகுப்பில் தங்கள் அலங்கார ஊர்திகள் காட்சிப்படுத்தப்பட்டது. இதில் ஹரியானா அரசு சார்பில் காட்சிப்படுத்தப்பட்ட ஊர்தியில் மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடாவின் உருவச்சிலை இடம்பெற்று இருந்தது.