fbpx

இனி மது போதையில் வாகனம் ஓட்டினால் செம ஆப்பு..!! போக்குவரத்து காவல்துறை புதிய அறிவிப்பு..!!

பெரும்பாலான சாலை விபத்துக்கள் மது குடித்துவிட்டு வாகனங்களை இயக்குவதால் ஏற்படுகிறது. எனவே, அதனை தடுக்கும் வகையில் போக்குவரத்து காவல்துறை தற்போது கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஏற்கனவே மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் அபராதத் தொகையாக ரூ.10,000 வசூலிக்கப்பட்டு வருகிறது. போதை நபர்களுடன் வாகனங்களில் பயணிப்பவர்கள் போதையில் இருந்தால், அவர்களும் ரூ.10 ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டும் என்ற விதிமுறை தற்போது கடைபிடிக்கப்படுகிறது.

இந்நிலையில், அபராதத் தொகை கட்டாதவர்களின் வாகனங்களோ அல்லது இதர வாகனங்களோ அல்லது வீட்டில் உள்ள அசையும் சொத்துக்களோ நீதிமன்றங்கள் வாயிலாக பறிமுதல் செய்யப்படும், என்று போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஏனென்றால் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டாலும் அவர்கள் முறையாக கட்டுவதில்லை என்பதால் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை காரணமாக கடந்த ஒரே மாதத்தில் குடிபோதையில் வாகனம் ஓட்டிய நபர்களிடம் இருந்து ரூ.3.5 கோடி அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Chella

Next Post

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல்….! வெற்றி வாய்ப்பு யாருக்கு…?

Mon Feb 20 , 2023
ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகின்ற 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அதன் பின்னர் மார்ச் மாதம் 2ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.இங்கு தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக இ.வி.கே.எஸ் இளங்கோவன் வேட்பாளராக போட்டியிடுகிறார். அதன் பின்னர் அதிமுகவின் சார்பாக எடப்பாடி பழனிச்சாமி திறப்பு வேட்பாளரான கே.எஸ். தென்னரசு போட்டியிடுகின்றார். இதுவாக நாம் தமிழர் கட்சியின் சார்பாகவும் தேமுதிக மற்றும் சுயேட்சை […]

You May Like