நாள்தோறும் சாப்பிடும் ஒரு சில பானங்கள், நம்முடைய எலும்புகளை உருக்கி, அவற்றை பலவீனப்படுத்தும். இந்த பானங்கள் நம்முடைய ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கை விளைவிக்கும் என்பதோடு, எலும்பின் வலிமையையும் குறைந்து விடும்.
அதேபோல, அதிக அளவு ஆல்கஹால், காஃபின், கார்பனேட்டட் பானங்கள் மற்றும் அதிக சர்க்கரை கொண்ட சோடாக்கள் போன்ற பானங்கள் எலும்புகளுக்கு தீங்கை விளைவிக்கும். இந்த பானங்களை தவிர்க்க, சரியான உணவு மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை நாம் பின்பற்ற வேண்டும். இதன் காரணமாக, எலும்புகள் ஆரோக்கியமாகவும், வலுவாகவும் இருக்கும். எலும்புகளை உருவாக்குவதற்கு, உங்களுடைய அன்றாட வாழ்க்கையில் பின்வரும் பானங்களை சேர்த்துக் கொள்ளுங்கள்.
ஆல்கஹால், காஃபின் கார்பனேட்டட் பானங்கள் மற்றும் அதிக சர்க்கரை கொண்ட சோடாக்கள் உள்ளிட்டவற்றில் இருக்கின்ற சில கூறுகளை அதிகமாக சாப்பிடுவது ஆஸ்டியோபோரோசிஸ் உள்ளிட்ட உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தும். இது எலும்புகளின் ஆரோக்கியமற்ற நிலைக்கு வழிவகை செய்துவிடும்.
எலும்புகளை ஆரோக்கியமாக வைப்பதற்கு பால், தயிர், பன்னீர் தயிர் உள்ளிட்டவற்றில், இயற்கையான கால்சியம் மற்றும் எலும்பின் வலிமையை ஊக்குவிக்கும் புரதச்சத்து ஆகியவை இருக்கிறது.
கிரீன் டீயில், இரும்பு சத்து, விட்டமின் கே மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் இருக்கின்றன. எலும்புகளின் ஆரோக்கியத்தை இது மேம்படுத்த உதவியாக இருக்கும்.
அதேபோல, இளநீரில், பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் கால்சியம் போன்ற சத்துக்கள் இருக்கிறது. இது எலும்புகளின் வலிமையை ஊக்குவிக்கும்.ஆப்பிள் ஜூஸில் வைட்டமின் சி மற்றும் பைட்டோகெமிக்கல் இருக்கின்றன. இது எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவியாக இருக்கும்.
பச்சை காய்கறிகள் மற்றும் பழங்களில் விட்டமின்கள், தாதுக்கள் மற்றும் பைட்டோ நியூட்ரியன்கள் ஆகியவை இருக்கின்றன. அவை எலும்புகளை வலுப்படுத்த உதவியாக இருக்கும்.