fbpx

வரி ஏய்ப்பு செய்யும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை…! வருமான வரித்துறை இயக்குனர் எச்சரிக்கை…!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டலத்தில் 2022-23 நிதியாண்டில் வருமானவரி புலனாய்வுத் துறை மூலம் நடத்திய 81 சோதனைகளில் ரூ.170 கோடி மதிப்பிலான சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டதாக வருமான வரித்துறையின் தலைமை இயக்குநா் சுனில் மாத்தூா் தெரிவித்துள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கம் வருமான வரித்துறை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், இந்தியாவின் வளா்ச்சிக்கு தேவையான பொருளாதார உதவி வழங்குவதில், வருமான வரித்துறை முக்கிய பங்காற்றி வருகிறது. இந்த நிதியாண்டில் மத்திய அரசின் மொத்த வரி வருவாய் இலக்காக ரூ.33.6 லட்சம் கோடி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் நேரடி வரி வசூல் இலக்காக ரூ.18.3 லட்சம் கோடியாகும். நாட்டின் மொத்த வரி வசூலில் 54 % வருமான வரித்துறை பங்களிப்பாக உள்ளது.

இந்தியாவில் வருமான வரி ஏய்ப்பு செய்யும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. வருமான வரி புலனாய்வுத் துறை சாா்பில் இந்த நிதியாண்டில் மட்டும் 81 சோதனை நடத்தப்பட்டது. இதில் ரூ.170 கோடி மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் ரூ.120 கோடி ரொக்கம் மற்றும் ரூ.50 கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் கணக்கில் காட்டப்படாத ரூ.5,200 கோடி வருமானமும் கண்டறியப்பட்டதாக தெரிவித்தார்.

Vignesh

Next Post

இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருக்கா..? உடனே கோவிட் பரிசோதனை மேற்கொள்ளுங்கள்…! வேகமெடுக்கும் எரிஸ்…

Thu Aug 17 , 2023
உலக அளவில் கொரோனா பாதிப்புகள் குறைந்து வரும் நிலையில், அதன் புதிய மாறுபாடுகள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. அந்த வகையில் ஓமிக்ரானின் புதிய மாறுபாடான EG.5 – அதாவது எரிஸ் என அறியப்படும் இது சீனா, அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா, கனடா மற்றும் ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், இங்கிலாந்து, பிரான்ஸ், போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயின் என பல நாடுகளில் இந்த வகையான வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இந்த எரிஸ் வைரஸ் […]

You May Like