உத்திர பிரதேசத்தில் பெண்கள் பள்ளியில் 11 ஆம் வகுப்பு மாணவி தேர்வின் போது சானிட்டரி பேட் கேட்டதால் ஒரு மணி நேரம் வகுப்பறைக்கு வெளியே நிற்க வைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசத்தில் உள்ள ஒரு பெண்கள் பள்ளியில் நடந்த ஒரு துயர சம்பவத்தில், 11 ஆம் வகுப்பு மாணவி தேர்வின் போது சானிட்டரி பேட் கேட்டதால் ஒரு மணி நேரம் வகுப்பறைக்கு வெளியே நிற்க வைத்த சம்பவம் அரங்கேறி உள்ளது. இந்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினர் தங்களது கண்டனங்களை தெரிவித்ததை அடுத்து, விசாரணைக்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் உத்தரபிரதேசத்தில் மாதவிடாயின்போது பள்ளிக்கு சென்ற 11-ம் வகுப்பு மாணவி ஒருவர் சானிட்டரி நாப்கின் கேட்டதற்கு அவரை வகுப்புக்கு வெளியே நிறுத்திய அவலம் நடந்துள்ளது. இது தொடர்பாக சிறுமியின் தந்தை அளித்த புகாரின்படி, தனது மகள் மாதவிடாய் காலத்தில் தேர்வு எழுத பள்ளிக்குச் சென்றாள். முதல்வரிடம் சானிட்டரி பேட் கேட்டதும், எனது மகளை வகுப்பறையை விட்டு வெளியேறச் சொல்லி கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் வெளியே நிற்க வைத்துள்ளனர் என மாவட்ட நீதிபதி, மாவட்ட பள்ளிகள் ஆய்வாளர் (DIOS), மாநில மகளிர் ஆணையம் மற்றும் மகளிர் நலத்துறையிடம் தந்தை முறையான புகார்களை அளித்துள்ளார்.
மாவட்ட பள்ளிகள் ஆய்வாளர், விசாரணை நடந்து வருவதாக உறுதிப்படுத்தியுள்ளார், மேலும் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார். இந்த சம்பவம் கல்வி நிறுவனங்களில் மாதவிடாய் சுகாதார மேலாண்மையைச் சுற்றியுள்ள தொடர்ச்சியான சவால்களைக் காட்டுகிறது. இது தொடர்பாக அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்ற கோரிக்கை தற்பொழுது எழுந்துள்ளது.