fbpx

மாணவிகளே உஷார்..!! பேராசிரியை வாட்ஸ் அப் கணக்கில் இருந்து வந்த ஆபாச புகைப்படம்..!! அதிர்ச்சி சம்பவம்..!!

உ.பி-யில் உள்ள கல்லூரி ஒன்றில் உதவி பேராசிரியையாக பணியாற்றி வருபவர் நசீம். இவரது வாட்ஸ்அப் கணக்கில் இருந்து கல்லூரியில் படிக்கும் மாணவிக்கு குறுஞ்செய்தி ஒன்று சென்றுள்ளது. பின்னர், அந்த கணக்கில் இருந்து ஆபாச புகைப்படங்கள் மற்றும் செய்திகள் தொடர்ச்சியாக வந்துள்ளன. இதுபோன்று 6-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளுக்கு குறுஞ்செய்தி சென்றுள்ளது. இதனால், அதிர்ச்சி அடைந்த மாணவிகள், சம்பந்தப்பட்ட பேராசிரியையிடம் சென்று முறையிட்டனர். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர், தனது வாட்ஸ்அப் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது என உணர்ந்து உள்ளார்.

இந்த சம்பவம் குறித்து பேராசிரியை சைபர் க்ரைம் போலீசில் புகார் அளித்தார். அதில், தனது புகைப்படம் தவறாக பயன்படுத்தப்பட்டு, கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்தி சென்றதுடன், அவர்களை சிலர் மிரட்டியும் உள்ளனர் என தெரிவித்துள்ளார். அந்த எப்.ஐ.ஆர். பதிவில், கல்லூரி மாணவிகளின் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கப்பட்டு உள்ளன. போலியான வாட்ஸ்அப் கணக்கு ஒன்றை, கடந்த ஏப்ரல் இறுதியில் உருவாக்கி மாணவிகளை அந்த மர்ம நபர் தொடர்பு கொண்டுள்ளார். அதன்பின், மாணவிகளின் மொபைல் போனுக்கு வந்த ஓ.டி.பி. எண்ணை பகிரும்படி கூறியுள்ளார். அவர்கள் எண்ணை பகிர்ந்ததும், அவர்களுடைய வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து, கல்லூரி மாணவிகளின் வாட்ஸ்அப் கணக்குகளில் உள்ள அனைத்து செய்திகளும் அந்த நபருக்கு கிடைத்துள்ளன. மாணவிகளின் தனிப்பட்ட சாட்டிங்குகளை ஸ்கிரீன்ஷாட் எடுத்து வைத்துக் கொண்டு, அவர்களுக்கு ஆபாச புகைப்படங்கள் மற்றும் செய்திகளை அனுப்ப தொடங்கி உள்ளார். அவர்களை மிரட்டவும் தொடங்கினார். அவர் என்ன கூறுகிறாரோ அதனை செய்யும்படி மிரட்டி உள்ளார். இல்லையென்றால் சாட்டிங் விவரங்களை வைரலாக்கி விடுவேன் என அச்சுறுத்தியுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக சிம் கார்டு அடிப்படையில், அந்த மர்ம நபரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Chella

Next Post

நீட் தேர்வு பயம்..!! தூக்கில் தொங்கிய மாணவன்..!! கதறி துடித்த தாய்..!! சிக்கியது கடிதம்..!!

Mon May 8 , 2023
புதுச்சேரி அண்ணாநகர் பகுதியில் வசித்து வருபவர் துரைராஜ். இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி பரிமளம் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் பிசியோதெரபிஸ்டாக பணிபுரிந்து வருகிறார். கணவன்-மனைவி இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர். இதில், பரிமளம் 18 வயது மகன் ஹேமச்சந்திரன் மற்றும் மகளுடன் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று காலையில் ஹேமச்சந்திரன் அறையில் பரிமளம் சென்று பார்த்தபோது, அவன் தூக்கிட்டு சடலமாக […]
நீட் தேர்வு பயம்..!! தூக்கில் தொங்கிய மாணவன்..!! கதறி துடித்த தாய்..!! சிக்கியது கடிதம்..!!

You May Like