fbpx

மாணவர்களின் வருகை பதிவுக்கு ஏற்ப மதிப்பெண் வழங்க வேண்டும்…! பள்ளி கல்வித்துறை அதிரடி…!

11, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு ஒவ்வொரு பாடத்திற்க்கும் அகமதிப்பீடு மதிப்பெண் அளிப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அதில், பள்ளி மாணவர்களின் வருகை பதிவுக்கு ஏற்ப, அகமதிப்பீட்டு மதிப்பெண் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் அனுப்ப வேண்டும். இவற்றை பின்பற்றி வருகைப் பதிவு, பள்ளித் தேர்வுகள், செயல் திட்டங்கள், கல்வி இணைச் செயல்பாடுகளின் அடிப்படையில் மாணவர்களுக்கு அகமதிப்பீடு மதிப்பெண் வழங்கப்பட வேண்டும். இதுதொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் உரிய அறிவுறுத்தல் வழங்க வேண்டும்.

பொது தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு, குறைந்தபட்சம், 75 சதவீதம் வருகைப்பதிவு இருக்க வேண்டும். அதில், 80 சதவீதம் வரை பள்ளிக்கு வந்தவர்களுக்கு, 1 மதிப்பெண்ணும்; 80 முதல் 100 சதவீதம் வந்தவர்களுக்கு, 2 மதிப்பெண்ணும் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Vignesh

Next Post

டிசம்பர் 2-ம் தேதி..! கலைஞர் 100... வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு சூப்பர் அறிவிப்பு...!

Wed Nov 29 , 2023
டிசம்பர் 2ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டத்தில் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; தமிழ்நாடு அரசு முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக 100 சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்களை தமிழ்நாடு முழுவதும் நடத்திட அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள படித்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில், காஞ்சிபுரம் […]

You May Like