fbpx

”மாணவர்களுக்கு அந்த எண்ணம் மட்டும் கூடவே கூடாது”..! – முதலமைச்சர் முக.ஸ்டாலின்

தொண்டை பாதிக்கப்பட்டாலும் தொண்டு பாதிக்கப்படக் கூடாது என்பதால், தன்னுடைய பணிகளைத் தொடர்ந்து வருவதாக முதலமைச்சர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை வேளச்சேரியில் உள்ள குரு நானக் கல்லூரியின் 50-ஆம் ஆண்டு பொன் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், முதலமைச்சர் முக.ஸ்டாலின், அமைச்சர் தா.மோ. அன்பரசன் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர். அப்போது பேசிய முதலமைச்சர், ”கொரோனா தொற்றால் தன் தொண்டை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தொண்டை பாதிக்கப்பட்டாலும் தொண்டு பாதிக்கப்படக் கூடாது என்பதால், தன்னுடைய பணிகளைத் தொடர்ந்து வருவதாகவும் தெரிவித்தார்.

”மாணவர்களுக்கு அந்த எண்ணம் மட்டும் கூடவே கூடாது”..! - முதலமைச்சர் முக.ஸ்டாலின்

தொடர்ந்து பேசிய அவர், இந்த கல்லூரி தொடங்கும் போது திமுக ஆட்சி இருந்ததாகவும், அப்போதைய முதலமைச்சராக இருந்த கருணாநிதி இந்த கல்லூரியைத் தொடங்கி வைத்ததாகவும் அவர் தெரிவித்தார். மேலும், குரு நானக் பெயரால் தொடங்கப்பட்டதால், இந்த கல்லூரிக்கு 25 ஏக்கர் கோட்டையாக அப்போது இருந்த திமுக அரசு வழங்கியதாகக் குறிப்பிட்ட அவர், அது வீன் போகவில்லை என்பதற்குச் சான்று தான் இந்த விழா எனக் கூறினார். கருணாநிதி தொடங்கியது எதுவும் சோடை போகாது எனவும், மாணவிகளுக்கு பாலியல், உடல் ரீதியாக இழிச் செயல் நடந்தால் அதைத் தமிழ்நாடு அரசு வேடிக்கை பார்க்காது எனவும், குற்றவாளிகளுக்கு நிச்சயம் தண்டனை பெற்றுத் தருவோம் எனவும் உறுதியளித்தார். மேலும், மாணவர்களுக்கு அந்த எண்ணம் கூடவே கூடாது எனவும் அறிவுரை வழங்கினார்.

Chella

Next Post

கள்ளக்குறிச்சி மாணவி மரணம்.. சிக்கப்போக்கும் பள்ளி நிர்வாகிகள்.. சிபிசிஐடி புதிய மனு..

Tue Jul 26 , 2022
கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக, பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்களை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ மனு அளித்துள்ளது.. கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூர் கிராமத்தில் உள்ள சக்தி மெட்ரிக்குலேசன் பள்ளியில் பயின்று வந்த மாணவி ஸ்ரீமதி சந்தேகத்திற்குரிய முறையில் கடந்த ஜூலை 13 அன்று உயிரிழந்தார். மாணவியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். எனினும் இந்த போராட்டம் கலவரத்தில் முடிந்தது.. போராட்டக்காரர்கள் பள்ளியை சூறையாடியதுடன், மாணவர்களின் […]
மாணவி பயன்படுத்திய செல்போனை ஒப்படைக்க பெற்றோர் மறுப்பு..!! ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!!

You May Like