fbpx

மாணவர்களே..!! விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்..!! மிஸ் பண்ணாம வேலையை முடிச்சிருங்க..!!

தமிழ்நாட்டில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடந்து முடிந்த நிலையில், கடந்த மே 8ஆம் தேதி பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. இதனை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார். இதில் மொத்தம் 47,934 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெறவில்லை. தேர்வில் தோல்வியடைந்தவர்கள் மற்றும் தேர்வுக்கு செல்லாத மாணவர்களுக்கு ஜூன் 19 முதல் 26 ஆம் தேதி வரை துணைத்தேர்வு நடைபெற உள்ளது.

இந்த தேர்வு எழுத மாணவர்கள் அவர்கள் பயின்ற பள்ளிகளிலும் தனித்தேர்வர்கள் கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்களிலும் மே 11ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், துணைத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் மே 17ஆம் தேதி அதாவது இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது. இன்று விண்ணப்பிக்க தவறினால், சிறப்பு அனுமதி திட்டத்தில் உரிய கூடுதல் கட்டணத்துடன் சனிக்கிழமை வரை இணையவழியில் ரூ.1,000 செலுத்தி விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

’தொப்பையை குறைக்க முடியாத போலீசார் விஆர்எஸ் பெற்றுச் செல்லலாம்’..!! முதலமைச்சர் எச்சரிக்கை..!!

Wed May 17 , 2023
உடல் எடையைக் குறைக்க முடியாத போலீசார் விருப்ப ஓய்வுத் திட்டத்தின் (விஆர்எஸ்) கீழ் ஓய்வு பெற்றுச் செல்லலாம் என்று அசாம் மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வ சர்மா தெரிவித்துள்ளார். அசாம் மாநில காவல்துறையில் அதிரடி சீர்திருத்தங்களைக் கொண்டு வர முதல்வர் ஹிமந்தா பிஸ்வ சர்மா முடிவு செய்துள்ளார். அதன் ஒரு பகுதியாக, போலீஸார் தங்களது உடலை முழு தகுதியுடன் வைத்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வழிகாட்டுதல்களை முதல்வர் ஹிமந்தா, […]
’உடல் எடையை குறைக்க முடியாத போலீசார் விஆர்எஸ் பெற்றுச் செல்லலாம்’..!! முதலமைச்சர் எச்சரிக்கை..!!

You May Like