fbpx

“குட் நியூஸ்” இவர்கள் எல்லோருக்கும் மாதம் ரூ.1,500 உதவித்தொகை…! விண்ணப்பிக்கும்தேதி அறிவித்த தமிழக அரசு…!

இலக்கியத் திறனறிவுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை மூலம் மாதம் ரூபாய் 1,500 வீதம் இரண்டு வருடங்களுக்கு வழங்கப்படும்.

இதுகுறித்து அரசுத்தேர்வுத்துறை இயக்குநர் சேதுராமவர்மா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”பள்ளி மாணவர்களின் அறிவியல், கணிதம் சார்ந்த ஒலிம்பியாய்டு தேர்வுகளுக்குப்பெருமளவில் தயாராகி பங்கு பெறுவதைப்போன்று தமிழ் மொழி இலக்கியத்திறனை மாணவர்கள் மேம்படுத்திக்கொள்ளும் வகையில் 2022-2023-ம் கல்வியாண்டு முதல் தமிழ் மொழி இலக்கியத்திறனறிவுத்தேர்வு நடத்தப்படவுள்ளது.

இத்தேர்வில் 1,500 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை மூலம் மாதம் ரூபாய் 1,500 வீதம் இரண்டு ஆண்டுகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். இத்தேர்வில் 50 விழுக்காடு அரசுப்பள்ளி மாணவர்களும் , மீதமுள்ள 50 விழுக்காட்டிற்கு அரசுப்பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட பிற தனியார் பள்ளி மாணவர்களும் தேர்வு செய்யப்படுவர்.

தமிழ்நாடு அரசின் 10-ம் வகுப்பு தர நிலையில் உள்ள தமிழ்ப்பாடத்திட்டங்களின் அடிப்படையில் கொள்குறி வகையில் தேர்வு நடத்தப்படும். அனைத்து மாவட்டங்களிலும் மாவட்டத்தலைநகரங்களில் இத்தேர்வு நடத்தப்படும். 2022-2023–ம் கல்வியாண்டில் தமிழ்நாட்டில் உள்ள அங்கீகாரம் பெற்ற அனைத்து வகைப்பள்ளிகளில் பயிலும் ( CBSE / ICSE / உட்பட) 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு அக்டோபர் 1-ம் தேதி (சனிக்கிழமை) அன்று தேர்வு நடைபெறவுள்ளது.

இத்தேர்விற்கு மாணவர்கள் தாங்கள் பயிலும் பள்ளியின் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க இயலும். எனவே, மாணவர்கள் இத்தேர்விற்கான விண்ணப்பங்களை ‘www.dge.tn.gov.in’ என்ற இணையதளம் மூலம் வரும் 22-ம் தேதி முதல் செப்டம்பர் 9 வரை பதிவிறக்கம் செய்து , பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேர்வுக்கட்டணத்தொகை ரூ.50 சேர்த்து சம்பந்தப்பட்ட பள்ளித்தலைமையாசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

குரூப் ஏ பணிக்கு விண்ணப்பம்...? இந்த தகவலை யாரும் நம்ப வேண்டாம் என அரசு அறிவிப்பு...!

Sat Aug 6 , 2022
வருமான வரித்துறையில், வருமான வரி அதிகாரியின் பணியில் சேர்வதற்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் உள்ளிட்ட கடிதம், தமிழகத்தில் சிலருக்கு வழங்குவதாக வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் செய்திகள் பரப்பப்பட்டது. இது சம்பந்தமாக, வருமான வரி அதிகாரி பணியிடமானது முற்றிலும் பதவி உயர்வால் நிரப்பப்படுகிறது. மேற்படி பதவிக்கு நேரடி ஆட்சேர்ப்பு இல்லை எனவும் இதன் மூலம் தெளிவுபடுத்தப்படுகிறது. மேலும், வருமான வரித்துறையில் உள்ள பல்வேறு அரசிதழ் அல்லாத பணிகளுக்கான ஆட்சேர்ப்பு ‘பணியாளர் […]
கல்லூரிகளில் சேர வரும் 27ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு..! உயர்கல்வித்துறை அறிவிப்பு

You May Like