அமலாக்கத்துறை வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு 36ஆவது முறையாக நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் செந்தில் பாலாஜிக்கு மே 4ஆம் தேதி வரை காவலை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
செந்தில் பாலாஜி மனு மீது அமலாக்கத்துறையினர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூன் 4ஆம் தேதிக்கு சென்னை அமர்வு நீதிமன்றம் ஒத்திவைத்தது. மேலும், வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மற்றொரு மனு மீது இன்று உத்தரவு ஏதும் பிறப்பிக்கப்படவில்லை.
Read More : ’சோகமா இருந்தா 10 நாட்களுக்கு விடுமுறை’..!! சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட பிரபல நிறுவனம்..!!