fbpx

அதிரடி காட்டிய சுப்மன் கில்..!! நிலைகுலைந்த நியூசிலாந்து..!! தொடரை கைப்பற்றியது இந்தியா..!!

நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதை அடுத்து, தொடரையும் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் நியூசிலாந்து அணி, கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்று விளையாடியது. ஏற்கனவே, நடைபெற்ற ஒருநாள் தொடரை இந்திய அணி முழுவதுமாக வென்றிருந்த நிலையில், தற்போது இவ்விரு அணிகளுக்கான டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில், முதல் போட்டியில் நியூசிலாந்து அணியும், இரண்டாவது போட்டியில் இந்திய அணியும் வெற்றிபெற்று, இரு அணிகளும் சமநிலை வகித்தன. இந்நிலையில், இந்த அணிகளுக்கான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று நடைபெற்றது.

அதிரடி காட்டிய சுப்மன் கில்..!! நிலைகுலைந்த நியூசிலாந்து..!! தொடரை கைப்பற்றியது இந்தியா..!!

அதன்படி, இந்திய அணியின் தொடக்க பேட்டர்களாக வழக்கம்போல் இஷான் கிஷனும், சுபமன் கில்லும் களமிறங்கினர். இதில், இஷான் கிஷன் 1 ரன்னில் வெளியேறி அதிர்ச்சி தந்தார். மறுமுனையில் நிலைத்து நின்ற சுப்மன் கில், நியூசிலாந்து பந்துவீச்சை நாலாபுறமும் சிதறவிட்டார். இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த அவர், 63 பந்துகளில் 126 ரன்கள் குவித்தார். அதில் 12 பவுண்டரிகளும், 7 சிக்ஸர்களும் அடக்கம். மறுபக்கம் கேப்டன் ஹர்திக் பாண்டியாவும் அதிரடியாக ஆடி, 17 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தார். முன்னதாக அதிரடியாக விளையாடிய, ராகுல் திரிபாதி 44 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 24 ரன்களும் எடுத்தனர். இறுதியில் இந்திய அணி 20 ஓவர்களில், 4 விக்கெட் இழப்புக்கு 234 ரன்கள் எடுத்தது.

இந்த மைதானத்தில் டி20 போட்டியில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராகவும் இது பதிவாகியது. இதற்கு முன் இந்திய அணி கடந்த 2021இல் இங்கிலாந்துக்கு எதிராக எடுத்த 224 ரன்களே சாதனையாக இருந்தது. பின்னர், கடினமான இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு ஆரம்பம் முதலே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க விக்கெட்களை கேப்டன் ஹர்திக் பாண்டியாவும், அர்ஷ்தீப் சிங்கும் மாறிமாறி தங்களது பந்துவீச்சில் வெளியேற்றினர். பின்னர், உம்ரான் மாலிக்கும் தன் பங்குக்கு 1 விக்கெட் எடுக்க அந்த அணி, 4.3 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து பரிதவித்தது. அப்போது அந்த அணி வெறும் 21 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. ஆனால், அதற்குப் பின் களமிறங்கிய மிட்செல்லும், சாண்ட்னரும் கொஞ்ச நேரம் மிரட்டினர். ஆனால், 13 ரன்கள் எடுத்திருந்த சாண்ட்னரை சிவம் மாவி பிரித்தார். தொடர்ந்து களமிறங்கிய சோதியையும் டக் அவுட்டாக்கி வெளியேற்றினார். அடுத்து களமிறங்கிய ஃபெர்குஷனையும் ஹர்திக் டக் அவுட்டாக்கி வெளியேற்றினார். இப்படி, அடுத்தடுத்து விக்கெட்கள் சீட்டுக்கட்டுபோல் சரிந்தாலும் மிட்செல் மட்டும் இறுதிவரை நின்று தனி ஒருவனாகப் போராடினார். இறுதியில் அவரும் வீழ்ந்த பிறகு அந்த அணியின் தோல்விக்கு முடிவுக்கு வந்தது.

இறுதியில் அந்த அணி 12.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து வெறும் 66 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் இந்திய அணி 168 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன் தொடரையும் வென்றது. இந்திய அணி தரப்பில் ஹர்திக் பாண்டியா 4 விக்கெட்களையும், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக், சிவம் மாவி ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். இந்திய அணிக்கு மிகப்பெரிய ரன் வித்தியாசத்திலான வெற்றி இதுதான். 126 ரன்கள் குவித்த சுப்மன் கில் ஆட்ட நாயகன் விருதினை தட்டிச் சென்றார். அதேபோல், பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட கேப்டன் ஹர்திக் பாண்டியா தொடர் நாயகன் விருதினை பெற்றார்.

Chella

Next Post

அண்டை வீட்டாரோடு சண்டை….! குறுக்கே பாய்ந்த திமுக கவுன்சிலரின் கணவர் இறுதியில் நடந்த விபரீதம்…..!

Thu Feb 2 , 2023
பொதுவாக திமுக எதிர்க்கட்சியாக இருந்த சமயத்தில் திமுக என்றால் ரவுடிசம், ரவுடிசம் என்றால் திமுக என்ற வாக்கியத்தை தங்களுடைய அடைமொழியாக அதிமுக வைத்திருந்தது. அதற்கேற்றார் போல திமுக செய்யும் ஒவ்வொரு செயலும் இருந்தது.எதிர்க்கட்சியாக இருந்தபோது அப்படி என்றால் தற்போது திமுக ஆளும் கட்சியாக அமர்ந்திருக்கிறது அப்படி என்றால் கேட்கவா வேண்டும். சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே ரமேஷ் மற்றும் அவருடைய எதிர் வீட்டுக்காரர் இளங்கோவன் உள்ளிட்டோருக்கிடையிலான பிரச்சனையில் இளங்கோவுக்கு ஆதரவாக […]

You May Like