fbpx

அடி தூள்…! பன்றிகளை வளர்க்க தமிழக அரசு சார்பில் மானியம்…! முழு விவரம் இதோ…

உட்கட்டமைப்பு வசதி மற்றும் பன்றிகளை கொள்முதல் செய்ய தமிழக அரசு சார்பில் மானியம், கடன் வழங்கப்படும்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்; மாநிலத்தின் ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், பன்றி வளர்ப்பில் தேவையான ஊக்குவிப்பு வழங்க, நன்கு வரையறுக்கப்பட்ட பன்றி வளர்ப்புக் கொள்கை முக்கியமானதாகும். சாதாரணமான பன்றிகளின் மரபணுத்திறனை மேம்படுத்துதல், மேம்பட்ட வகையைச் சேர்ந்த தனிநிலை நாட்டுப்பன்றிகளின் இனப்பெருக்க திசுக்களை பாதுகாத்தல், பராமரித்தல், இனக்கலப்பு வழிமுறையை பின்பற்றி, வழக்கமாக காணப்படும், வளர்க்கப்படும் காட்டுப்பன்றி வகைகளுக்குப்பதில் படிப்படியாக விரும்பிய அளவில் வேற்றினப் பண்புகளை மரபுவழி பெற்று இனக்கலப்பு செய்யப்பட்ட இனப்பெருக்கத் திசுக்களை கொண்டு சாதாரண பன்றிகளை மேம்படுத்துதல், குறைந்த விலை தீவனத்தை உருவாக்கி விவசாயிகளுக்கு சொந்தமான இடங்களில் இனக்கலப்பு செய்யப்பட்ட விலங்குகளை பராமரிப்பதை ஊக்குவித்தல் ஆகியவை இதன் பிரதான நோக்கமாகும்.

கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தால் நாட்டுப்பன்றிகளின் இனப்பெருக்கத் திசுவைப் பதிவு செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். விவசாயிகளின் நிலத்தில் பாரம்பரிய இனபபெருக்கத் திசுக்களை பெருக்கும் வகையில் விருப்பமுள்ளவர்களுக்கு மரபு வழி பன்றிகள் வழங்கப்படும். விலை நிர்ணயிக்கப்பட்ட பன்றிகளை பராமரித்து வரும் நிலங்களில், எந்த ஒரு கலப்பினமும் ஊக்குவிக்கப்படாது. உயிருள்ள பன்றிகளை இறக்குமதி செய்ய முன்னுரிமை அளிக்கப்படும்.

எந்த ஒரு தாய்ப்பன்றியும் 3 முறை குட்டிகள் ஈனுவது பதிவு செய்யப்பட வேண்டியது கட்டாயம். குட்டிகளின் எண்ணிக்கை, எடை, பால் குடி மறப்பின் போதுள்ள எடை போன்றவை மதிப்பீடு செய்யப்பட வேண்டும். விவசாயிகளின் விருப்பப்படியான முறையற்ற இனக்கலப்பு அனுமதிக்கப்பட மாட்டாது. நாட்டுப் பன்றிகளின் இனப்பெருக்க திசுக்களுக்கான தனி நிலை இனப்பெருக்க பண்ணை, தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத்தால் தனியாக உருவாக்கப்படும். கால்நடை இனப்பெருக்க மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும். உட்கட்டமைப்பு வசதி மற்றும் பன்றிகளை கொள்முதல் செய்ய மானியம், கடன் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary

Subsidy from Tamil Nadu government for rearing pigs.

Vignesh

Next Post

Navratri 6th Day!. மஹிஷா சூரனை கொன்ற கத்யாயனியை எப்படி வழிபடணும் தெரியுமா?

Tue Oct 8 , 2024
Do you know how to worship Katyayani who killed Mahisha Sooran?

You May Like