இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, சந்திரயான்-3 விண்கலனை, எல்எம்வி3 ராக்கெட் உடன் ஒருங்கிணைத்து 2.35 மணிக்கு விண்ணில் ஏவியது. பூமியில் இருந்து 179 கிமீ நீள்வட்டப்பதையில் சந்திராயன் 3 நிலை நிறுத்தப்பட்டது. எல்.வி.எம் 3 எம்4 S200 திட பூஸ்டர் ராக்கெட்டில் இருந்து பிரிந்துவிட்ட நிலையில். சந்திரயான் 3 வின்கலத்தைச் சுமந்து செல்லும் LVM 3 M4 ராக்கெட்டின் முதல் 3 அடுக்குகள் வெற்றிகரமாகப் பிரிந்தன. சந்திராயன் 3 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
நிலவிற்க்கான பயணத்தை தொடங்கியது சந்திராயன் 3 என்று கூறியுள்ளார் இஸ்ரோ தலைவர் சோம்நாத். மேலும் ஆகஸ்ட் 23 அன்று நிலவில் சாப்ட் லாண்டிங் உள்ளது குறிப்பிடத்தக்கது. சந்திராயன் 3 வெற்றி பெற்றால் இந்தியா நிலவில் வெற்றி கொடியை நாட்டும், இதனால் நிலவில் வெற்றி கோடி நாட்டிய நான்காவது நாடு என்ற பெருமையை இந்தியா பெரும்.
சந்திராயன் 3 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதையடுத்து, பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியின் ட்விட்டர் பதிவில்”சந்திரயான்-3 இந்தியாவின் விண்வெளி ஒடிஸியில் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதுகிறது. ஒவ்வொரு இந்தியனின் கனவுகளையும் லட்சியங்களையும் உயர்த்தி, உயரமாக உயர்கிறது. இந்த முக்கியமான சாதனை நமது விஞ்ஞானிகளின் அயராத அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாகும். தங்களின் ஆன்மாவிற்கும் புத்தி கூர்மைக்கும் தலை வணங்குகிறேன்!” என்று கூறியிருக்கிறார்.