fbpx

தமிழக முதலமைச்சர் டெல்லி பயணத்தில் திடீர் மாற்றம்…! என்ன காரணம்…?

டெல்லியில் இருந்து இன்று காலை காலை சென்னை திரும்புகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். சென்னையில் ஆய்வுக் கூட்டத்தை முடித்த பின் இன்று மாலை விமானம் மூலம் மதுரை சென்று அங்கிருந்து சாலை மார்க்கமாக நெல்லை செல்ல உள்ளார். டெல்லியில் இருந்து நேரடியாக தென்மாவட்டங்களில் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய திட்டமிட்டிருந்த நிலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பெய்த கனமழையின் காரணமாக கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்கொள்ளவும், மக்களுக்குத் தேவையான மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளையும் மேற்கொள்ள அமைச்சர் பெருமக்கள் மற்றும் இந்திய ஆட்சிப்பணி அலுவலர்களும் உடனடியாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு அனுப்பிவைக்க மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டிருந்தார்.

மேலும், அப்பகுதிகளில் மாநில பேரிடர் மீட்புக் குழு தேசிய பேரிடர் மீட்புக் குழு தீயணைப்புத்துறை, காவல் துறையினர் மற்றும் அனைத்து அரசுத் துறைகளுடன் இணைந்து ஒருங்கிணைந்த முறையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, பாதிக்கப்பட்ட மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு வருகிறார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்தச் சூழ்நிலையில் இன்று தூத்துக்குடிக்குச் செல்வதாக அறிவித்திருந்த முதலமைச்சர் மத்தியக் குழு இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்ள உள்ளதால், மாவட்ட நிர்வாகம் அவர்களுக்கு உடனிருக்க வேண்டிய நிலையைக் கருத்தில் கொண்டு, இன்று இரவு மதுரை சென்று நாளை தூத்துக்குடியில் ஆய்வு மேற்கொள்கிறார்.

Vignesh

Next Post

மழைக்காலத்திற்கு ஏற்ற காரசாரமான ஸ்பெஷல் முட்டை பொடி மசாலா எப்படி செய்யலாம்னு தெரிஞ்சிக்கலாம்.! சில நிமிட ரெசிபி.!

Wed Dec 20 , 2023
எப்போதும் ஒரே மாதிரியான டிஷ் செஞ்சு சாப்பிட்டு போர் அடிக்குதா வாங்க டிஃபரண்டா பொடி முட்டை மசாலா எப்படி செய்வது என்று பார்க்கலாம். இது செய்றதுக்கு 4 அவித்த முட்டைகள் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த முட்டை மசாலாவிற்கான பொடி செய்வதற்கு 1 டேபிள் ஸ்பூன் முழு கொத்தமல்லி, உளுந்து, மிளகு, 6 வர மிளகாய், 4 பல் நாட்டு பூண்டு, சிறிது கருவேப்பிலை இலைகள் ரெண்டு டேபிள் ஸ்பூன் […]

You May Like