கள்ளக்குறிச்சி மாவட்ட பகுதியில் உள்ள எம்.தாங்கள் கிராமத்தில் செல்வகுமார்(26) எனபவர் தனது மனைவி சினேகாவுடன் (21) வசித்து வருகிறார்.
செல்வக்குமார் மற்றும் சினேகா தம்பதியினருக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் மீண்டும் கர்ப்பமாக இருந்த சினேகா சென்ற 9- ஆம் தேதி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
நேற்றைய தினத்தில் காலை 7.30 மணி அளவில் சினேகாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மருத்துவர்கள் சினேகாவை பிரசவ வார்டுக்கு அழைத்து சென்றனர்.
இதனை தொடர்ந்து மாலை 3:20 மணிக்கு பிரசவ வலி கூடுதலாக ஏற்பட்டுள்ளது. மேலும் சினேகாவுக்கு திடீரென வலிப்பு மற்றும் இருதய அடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டதாக மருத்துவர்கள் உறவினர்களிடம் கூறியுள்ளனர்.
இந்த செய்தியை கேட்ட கணவர் தன்னுடைய மனைவியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி விசாரணை நடத்த வேண்டும் என்று காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.