கொரோனா தடுப்பூசிக்கும் இளம் வயதிலேயே திடீர் உயிரிழப்புகள் ஏற்படுவதற்கும் இடையே உள்ள காரணத்தை புரிந்துகொள்ளும் வகையில் இரண்டு திருப்புமுனை ஆய்வுகள் நடைபெற்றுவருகிறது. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ICMR) சமீபத்திய ஆய்வு மாரடைப்பால் ஏற்படும் திடீர் இறப்புகளுக்கும், கோவிட்-19 தடுப்பூசிகளுக்கும் இடையே தொடர்பு இருக்கிறதா என்கிற ஆராய்ச்சியை மேற்கொண்டிருந்தது. இந்த ஆய்வுகள் 18 முதல் 45 வயது வரையிலான இறப்புகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுவருவதாக ICMR – இன் இயக்குநர் ஜெனரல் ராஜீவ் பால் குறிப்பிட்டுள்ளார். மேலும் இது குறித்து பேசிய அவர், நாங்கள் எந்த காரணமும் இல்லாமல் திடீர் மரணங்கள் பார்க்கிறோம். எனவே, இந்த ஆய்வு கொரோனா வைரஸால் இந்த உயிரிழப்புகள் ஏற்படுகிறதா என்பதை புரிந்துகொள்ள உதவும் என்றும் கூறினார்.
அதாவது ஐசிஎம்ஆரின் கூற்றுப்படி, திடீர் மரணங்கள் என்பது அறியப்படாத கொமொர்பிடிட்டிகள் இல்லாமல் ஆரோக்கியமாக இருக்கும் ஒரு நபரின் எதிர்பாராத மரணம் என்று பொருள். அதனடிப்படையில், டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் இதுவரை 50 பிரேதபரிசோதனைகளை ஆய்வு செய்துள்ளதாகவும் அடுத்த சில மாதங்களில் 100 என்ற இலக்கை அடைய திட்டமிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பிரேத பரிசோதனைகளின் முடிவுகளை கொரோனாவிற்கு முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது காரணங்கள் அல்லது வேறுபாடுகலை நாங்கள் புரிந்துகொள்ள முயற்சித்து வருவதாகவும், மருத்துவர் ராஜீவ் பால் கூறியுள்ளார்.
மேலும் கொரோனா பரவலுக்கு பிந்தைய காலத்தில் இளைஞர்களிடையே ஏற்படும் திடீர் மரணங்களை மனித உடலுக்குள் ஏதேனும் உடலியல் மாற்றங்கள் தூண்டியுள்ளதா என்பதை கண்டறியவே இந்த ஆய்வின் நோக்கம் என்றும் அவர் கூறினார். மேலும், திடீர் இதய செயலிழப்பு அல்லது நுரையீரல் பாதிப்பு இவைகளே அதிக இறப்புகளுக்கு உதாரணமாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஐசிஎம்ஆர்- ஆனது 18 முதல் 45 வயதுக்குட்பட்டவர்களில் கடந்த ஒரு ஆண்டுகளில் ஏற்பட்ட மரணங்களின் தரவுகளின் அடிப்படையிலும் ஆய்வை நடத்திவருவதாகவும், இந்தியா முழுவதிலும் இருந்து இந்த ஆய்வுக்கான விவரங்கள் 40 மருத்துவமனைகளின் மருத்துவப் பதிவேட்டில் இருந்து எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.