fbpx

சென்னையில் திடிரென மீண்டும் இடியுடன் கூடிய கனமழை…!

சென்னையில் நேற்று வெயில் அடித்த நிலையில் இன்று மீண்டும் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது.

மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று அதிகாலை 4.30 மணிக்கு வட தமிழகம் – தெற்கு ஆந்திர கடற்கரைப் பகுதியில் புதுச்சேரி மற்றும் நெல்லூருக்கு இடையே சென்னைக்கு வடக்கே கரையை கடந்தது.

இந்நிலையில், தமிழகப் பகுதிகளின் மேல் தற்போது ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்றும், நாளையும் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், 20 முதல் 22-ம் தேதி வரை பெரும்பாலான இடங்களிலும், 23-ம் தேதி ஒருசில இடங்களிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இன்று வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங் களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 20, 21-ம்தேதிகளில் ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருச்சி,திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள் மற்றும் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையில் மந்தைவெளி, அடையாறு, வடபழனி, OMR சாலை, கிண்டி, சோழிங்கநல்லூர், அசோக் நகர் உள்ளிட்ட சென்னையின் பல்வேறு பகுதிகளில் தற்போது இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. நேற்று வெயில் அடித்த நிலையில் இன்று மீண்டும் மழை பெய்து வருகிறது.

English Summary

Sudden rain in Chennai again with thunder…

Vignesh

Next Post

இது தெரிந்தால் இனி நீங்களே கோழி கால்களை கேட்டு வாங்கிட்டு வருவீங்க..!! சருமம் முதல் இதய ஆரோக்கியம் வரை..!!

Fri Oct 18 , 2024
Due to the collagen present in the chicken leg, the skin heals well.

You May Like