தென்கொரிய அதிபர் யூன் சுக்கை பதவி நீக்கம் செய்து அந்நாட்டு நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
எதிர்க்கட்சியினர், வடகொரியாவுடன் இணைந்து நாடாளுமன்றத்தை முடக்க சதித் திட்டம் தீட்டுவதாக கூறி கடந்த டிசம்பர் மாதம் ராணுவ ஆட்சியை அமல்படுத்தி சில மணி நேரங்களில் வாபஸ் பெற்றார். அதன் பின்னர், அவர் மீது பல புகார்கள் எழுந்த நிலையில், தற்போது தென் கொரியாவின் அரசியலமைப்பு நீதிமன்றம் இன்று அவரை பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.
அவரது இராணுவச் சட்ட அறிவிப்பு அரசியலமைப்பு ஒழுங்கில் “கடுமையான எதிர்மறை தாக்கத்தை” ஏற்படுத்தியதால், டிசம்பர் மாதம் தேசிய சட்டமன்றத்தின் பதவி நீக்க வாக்கெடுப்பையும் இந்த தீர்ப்பு உறுதி செய்தது. தேசிய அளவில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இந்த வழக்கில் மொத்தம் 8 நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். இதில், 6 நீதிபதிகள் அதிபரின் பதவி நீக்கத்திற்கு ஆதரவாக தீர்ப்பளித்துள்ளனர். இந்த தீர்ப்பை அடுத்து, இன்னும் இரண்டு மாதங்களுக்குள் புதிய அதிபர் தேர்தலை நடத்த வேண்டிய கட்டாயத்தில் தென்கொரியா உள்ளது.