எப்போதும் சமையல் செய்யும்போது, சிலிண்டரை மிகவும் கவனமாக கையாள்வது அவசியம். அப்படி சிலிண்டரை கையாள்வதில், ஒரு சிறிய தவறு ஏற்பட்டாலும், அது நம்முடைய உயிருக்கே ஆபத்தாகிவிடும். இது பல்வேறு சமயங்களில், பல்வேறு பகுதிகளில் நிரூபணம் ஆகி இருக்கிறது.
ஆனாலும், இன்னமும் பொதுமக்களிடையே இது தொடர்பான விழிப்புணர்வு காணப்படவில்லை. இதனால், இன்றும் பல்வேறு விபத்துக்கள் நிகழ்ந்த வண்ணம் தான் இருக்கிறது.
அந்த வகையில், சென்னை அருகே மணலி பகுதியில், வீட்டில் சமையல் சிலிண்டர் வெடித்ததில், ஒரே குடும்பத்தைச் சார்ந்த நான்கு பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மூதாட்டி சந்தன லட்சுமி, சிறுமிகளான, பிரியதரிதா, சங்கீதா, பவித்ரா உள்ளிட்ட நான்கு பேர் இந்த சம்பவத்தில் பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்கள்.
அதிகாலை சமயத்தில், ஏற்பட்ட இந்த பயங்கர சம்பவம், அந்த பகுதியில் இருக்கும் மக்களை சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. இனிவரும் காலங்களிலாவது சமையல் ஏரிவாயு சிலிண்டரை கையாளும்போது, எல்லோரும் கவனத்துடன், இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.