fbpx

கோடை சீசன்!… சருமத்தை பராமரிக்க!… ரோஸ் வாட்டரை இப்படி யூஸ் பண்ணுங்க!

கோடை காலங்களில் சருமத்தை பராமரிக்க ரோஸ் வாட்டரை தவறாமல் பயன்படுத்தலாம். இதனால் ஏற்படும் நன்மைகள் குறித்து இதில் பார்ப்போம்.

அனைவரும் சரும ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் முக்கியத்துவம் அளிப்பது வழக்கம். அந்த வகையில் தற்போது வெயில் காலம் தொடங்கியுள்ள நிலையில் நமது சரும ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் ரோஸ் வாட்டரும் முக்கிய பங்கு வகிக்கிறது.கோடை காலத்தில் சரும பிரச்சினைகள் சற்று அதிகமாகவே காணப்படும். ஏனெனில் நீர் சத்துதான் சருமத்தை பளபளப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கிறது. கோடையில் வெப்பம் அதிகமாக காணப்படுவதால் உடலில் நீர் சத்து குறையும் போது சருமமும் பாதிப்புக்குள்ளாகிறது.

இதனால் சருமத்தில் எரிச்சல், தடிப்புகள், பருக்கள் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. இந்த பிரச்சனைகளுக்கு ரோஸ் வாட்டர் ஒரு சிறந்த தீர்வாக அமைகிறது. அதாவது எரிச்சல் தடிப்புகள் போன்ற பிரச்சினை ஏற்படும் போது சருமத்தில் ரோஸ் வாட்டரை பூசுவதன் மூலம் ரோஸ் வாட்டர் உள்ள ஆண்டி ஆக்சிடென்ட்கள் சருமத்தை பாதுகாப்பாகவும் நீரேற்றமாகவும் வைகிளர்க்க உதவும்.ரோஸ் வாட்டர் ஒரு பக்கம் பயன்படுத்தினாலும், நமது சரும ஆரோக்கியம் அதிகமாக பேணிக் காக்கப்பட தண்ணீர் பருகுவதும் மிகவும் அவசியமாகும்.

ரோஸ் வாட்டர் சருமத்தில் எளிதில் உறிஞ்சப்படக்கூடிய தன்மை கொண்டது. அதனால் தினமும் மாய்ஸ்ரைசருடன் ரோஸ் வாட்டர் கலந்து சருமத்தில் பூசி வரலாம். இதனால் சருமத்தை நீர்ச்சத்தை தக்க வைப்பதுடன் சருமத்தை பளபளப்பாகவும் வைத்திருக்கும். இதில் அலட்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளதால் சரும நோய்களுக்கு சிகிச்சை அளிக்கக்கூடியது. காட்டன் பஞ்சில் ரோஸ் வாட்டரை நினைத்து கண்களில் புருவம் அடிப்பகுதியில் தடவுவதன் மூலம் கண்ணில் ஏற்படக்கூடிய சோர்வை தடுக்கலாம். மேலும் இது சருமத்தில் எண்ணெய் பசை தன்மையை கட்டுப்படுத்தி, சருமத்தை பளபளப்பாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருக்க உதவுகிறது.

Kokila

Next Post

கடுமையான வெப்பத்தால் 7 பேர் உயிரிழப்பு...! 50 பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை...!

Mon Apr 17 , 2023
மகாராஷ்டிராவில் கடுமையான வெப்பத்தால் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர் மகாராஷ்டிராவில் பூஷன் விருது வழங்கும் நிகழ்வு நேற்று திறந்த வெளியில் நடைபெற்றது. கடுமையான வெப்பத்தால் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் சுமார் 24 பேர் வெப்பத்தின் காரணமாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் மற்றும் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். நவி மும்பையின் கார்கரில் மகாராஷ்டிரா பூஷன் விருது வழங்கும் விழாவின் […]

You May Like