fbpx

குஜராத்-க்கு அடித்தது யோகம் – சுந்தர் பிச்சை செயல்..!

சுந்தர் பிச்சை தலைமையிலான கூகுள் 2019- 20 ஆம் நிதியாண்டில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் பல ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்து, இந்திய டிஜிட்டல் வர்த்தக சந்தையின் வளர்ச்சியை கண்கூடாக பார்த்தது. இதில் வியந்து போன் கூகுள் நிர்வாகம் இந்தியாவில் இருக்கும் டிஜிட்டல் வர்த்தக வாய்ப்பை மொத்தமாக கைப்பற்ற முடிவு செய்தது. இதன் வாயிலாக ஜூலை 2020ல் கூகுள் நிறுவனம் இந்தியாவில் சுமார் 10 பில்லியன் டாலர் அளவிலான முதலீட்டை India Digitisation Fund ஆக அடுத்த 5 முதல் 7 வருடத்தில் முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்தது. இந்த முதலீட்டின் வாயிலாக கூகுல் இந்தியாவில் டிஜிட்டல் சேவை தளத்தை உலக நாடுகளுக்கு இணையாக மேம்படுத்தும் முயற்சியில் இறங்குவதாக அறிவித்தது.

இந்த நிலையில் பிரதமரின் அமெரிக்க பயணத்தை தொடர்ந்து 23 ஆம் தேதி பிரதமர் மோடி சுந்தர் பிச்சை-யை நேரில் சந்தித்து பேசியதை தொடர்ந்து முக்கிய அறிவிப்பை கூகுள் சார்பாக சுந்தர் பிச்சை தெரிவித்தார். மோடியை சுந்தர் பிச்சை சந்தித்த பின்பு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கூகுள் விரைவில் குஜராத் GIFT CITY-யில் குளோபல் பின்டெக் ஆப்ரேஷன் சென்டரை துவங்க உள்ளோம், அதேபோல் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 10 பில்லியன் டாலர் மதிப்பிலான India Digitisation Fund தொகையை முதலீடு செய்ய துவங்க உள்ளோம் என செய்தியாளர்களிடம் பேசும்போது கூறினார்.

குளோபல் பின்டெக் ஆப்ரேஷன் சென்டர் வாயிலாக மட்டும் அல்லாமல், கூகுள் இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு துறையில் இயங்கும் ஸ்டார்ட்அப் நிறுவனத்திலும் இந்த 10 பில்லியன் டாலர் தொகையில் முதலீடு செய்ய உள்ளோம் என தெரிவித்தார் கூகுள்.

Maha

Next Post

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை வைத்து தான் அமித்ஷா அந்த வார்த்தையை கூறினாரா…..? முன்னாள் அமைச்சரின் பேச்சால் பரபரப்பு……!

Sat Jun 24 , 2023
சமீபத்தில் நடைபெற்ற பாஜகவின் பொது கூட்டத்தில் பங்கேற்ற மத்திய உள்துறை அமித்ஷா எதிர்காலத்தில் ஒரு தமிழர் பிரதமராக வரவேண்டும் என்று பேசி இருந்தார். இது அந்த கட்சியினரிடையே சர்ச்சையை ஏற்படுத்தி இருப்பதைப் போல எதிர்க்கட்சிகள் ஒரு பிம்பத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. அவர் அந்த வார்த்தையை சொன்னாலும், சொன்னார் அப்படி என்றால் நரேந்திர மோடி பிரதமராக இருப்பது அமித்ஷாவுக்கு பிடிக்கவில்லையா? அண்ணாமலையை மனதில் வைத்து தான் அப்படி ஒரு வார்த்தையை சொன்னாரா? […]

You May Like