ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ் திட்டத்தின் கீழ் ஹர் கர் திரங்கா மற்றும் மேரி மதி மேரா தேஷ் திட்டங்களை செயல்படுத்துவதற்காக மாநிலத்தின் அனைத்து அடிப்படை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளையும் ஞாயிற்றுக்கிழமை திறக்க உத்தரப் பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது.
மாநில அரசு வெளியிடப்பட்ட உத்தரவுகளின்படி, அனைத்து மாணவர்களுக்கும் சிறப்பு மதிய உணவு வழங்கப்படும். இதன்படி ஆகஸ்ட் 13ம் தேதியான இன்று அனைத்து பள்ளிகளிலும் மாணவ, மாணவியருக்கு கவிதைப் போட்டி நடத்தப்படும். பொது விடுமுறை காரணமாக பள்ளிக் குழந்தைகளுக்கு சிறப்பு மதிய உணவு ஏற்பாடு செய்ய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர் மற்றும் மதிய உணவு ஆணைய இயக்குநர் விஜய் கிரண் ஆனந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார். அனைத்து அடிப்படைக் கல்வி அலுவலர்களுக்கும் பிறப்பித்த உத்தரவில், ஆசாதி கா அமிர்த் மஹோத்சவ் திட்டத்தின் நிறைவு விழாவின் ஒரு பகுதியாக, ‘மேரி மாத்தி மேரா தேஷ்’ பிரச்சாரத்தின் கீழ் அனைத்து கிராம பஞ்சாயத்துகள், நகர் பஞ்சாயத்துகள், மற்றும் வழிகாட்டுதல்களுக்கு இணங்க, உள்ளாட்சி நகர்ப்புற அமைப்புகள் ஆகஸ்ட் 9 முதல் 15 வரை கொண்டாடப்பட உள்ளது.