நாட்டில் கடந்த சில மாதங்களாக சமையல் எண்ணெய் விலை இறங்கு முகத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா தனது சமையல் எண்ணெய் தேவையில், 60 சதவீதத்தை இறக்குமதி செய்து வருகிறது. கடந்த சில மாதங்களாக, சர்வதேச சந்தையில் விலை அதிகரித்து வந்ததால், இந்தியாவில் எண்ணெய் விலை அதிகரித்து வந்தது. குறிப்பாக சில்லரை விற்பனையில் விலை உயர்வு எதிரொலித்தது. இதனால், சாமானிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், சமீபகாலமாக எண்ணெய் விலை குறைந்து வருகிறது.

மத்திய அரசு எடுத்த முக்கிய முடிவுகளால் கடந்த சில மாதங்களாக சமையல் எண்ணெய் விலை இறங்கு முகத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுத்திகரிக்கப்பட்ட சூரியகாந்தி எண்ணெய் லிட்டருக்கு ரூ.180இல் இருந்து ரூ.170ஆக குறைந்துள்ளது. மார்க்கனின் ரூ.154இல் இருந்து ரூ.146 ஆகவும், கடுகு எண்ணெய் ரூ.173இல் இருந்து ரூ.170 ஆகவும், பாமாயில் லிட்டருக்கு ரூ.138இல் இருந்து ரூ.119ஆகவும் குறைக்கப்பட்டுள்ளன.