தூய்மை காவலர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர மதிப்பூதியம் 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அனைத்து கிராம ஊராட்சிகளிலும் தூய்மையாக வைத்திருக்க தூய்மை காவலர்கள் இல்லம்தோறும் திடக்கழிவுகளை சேகரித்து தரம் பிரித்து மக்கும் குப்பைகளை உரமாக மாற்றும் பணியினை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், தூய்மை காவலர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர மதிப்பூதியம் 3,600 ரூபாயிலிருந்து, 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தூய்மை காவலர்களுக்கு மாதாந்திர மதிப்பூதியம் உயர்த்தி வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் அறிவித்திருந்த நிலையில், தற்போது செயல் வடிவம் பெற்றுள்ளது. ஊதிய உயர்வு மற்றும் மருத்துவ வசதி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வந்த நிலையில் தூய்மை காவலர்களுக்கு அரசு தற்போது மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது.