fbpx

மத்திய அரசு துறையில் மாதம் 67000 சம்பளத்தில் சூப்பர் வேலை வாய்ப்பு….! நேரமில்லை உடனே இதை செய்யுங்கள்…..!

நம்முடைய செய்தி நிறுவனத்தில், நாள்தோறும் பல்வேறு வேலை வாய்ப்பு குறித்த செய்திகளை நாம் வெளியிட்டு வருகிறோம். அந்த வகையில், இன்றும் பல்வேறு செய்திகள் வெளியிடப்பட்டிருக்கின்றன. அந்த வகையில், இன்று, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் இயங்கி வரும் National institute for implementation research on non communicable diseases நிறுவனத்தில், project research scientist |, project technical support | போன்ற பணிகளுக்கு காலி பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு 7 காலி பணியிடங்கள் மட்டுமே இருக்கின்றன. ஆகவே உடனடியாக விண்ணப்பம் செய்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் நபர்கள், அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில், 12 ம் வகுப்பு தேர்ச்சி, எம்.பி.பி.எஸ், எம்.டி போன்ற படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த பணிக்கு விண்ணப்பம் செய்யும் நபர்களின் வயது அதிகபட்சமாக 30 முதல், 35 வரையில் இருக்கலாம் என்று குறிப்பிட்டப்பட்டுள்ளது. இந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்களுக்கு மாதம் ஒன்றுக்கு, 67000 ரூபாய் ஊதியமாக வழங்கப்படும்.

இந்த பணிக்கு விண்ணப்பம் செய்யும் நபர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது.

ஆர்வமுள்ள மற்றும் தகுதி வாய்ந்த நபர்கள், இதன் அதிகாரப்பூர்வமான வலைதளத்தில் சென்று, விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து சரியான ஆவணங்களோடு, வரும் 13 9 2023 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் தவறாமல் பங்கேற்று கொண்டு, பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification PDF

Next Post

ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்..!! மின் கட்டணத்தில் தள்ளுபடி..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!

Tue Sep 12 , 2023
நாடு முழுவதும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரசு சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவிகள் மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும். அந்தவகையில், ஹரியானா மாநிலத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு கடுகு எண்ணெய் வழங்கப்பட்டு வருகிறது. அடையாள அட்டையுடன் கூடிய 1 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு மட்டுமே 2 பாட்டில் கடுகு எண்ணெய் வழங்கப்பட வேண்டும். ஆனால் மீதமுள்ள பயனாளிகளுக்கு கிடைக்காது. அதற்கு பதிலாக வேறு உதவிகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

You May Like