தருமபுரி மாவட்டத்தில் மாவட்டச் சிறப்பு திட்டச் செயலாக்க அலகிற்காக இளம் நெறிஞர் (Young Professional) பணியிடத்திற்கு தற்காலிக அடிப்படையில் தொகுப்பூதியத்தில் பணியாற்ற விண்ணப்பிக்கலாம்.
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அவர்களின் அலுவலகத்தில் திட்டச் செயலாக்க அலகிற்காக மாவட்ட அளவில் பல்வேறு துறைகளில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள் குறித்த விரிவான ஆய்வு மற்றும் தரமான தரவுகளை ஆய்வு செய்தல், ஆய்வுகளின் அடிப்படையில் விளக்கக்காட்சிகள், கொள்கை விளக்கங்களை உருவாக்குதல் ஆகிய நோக்கங்களை நிறைவேற்றும் விதமாக இளம் நெறிஞர் (Young Professional) பதவிக்கு பணியாற்றிட கணிணி அறிவியல் / தகவல் தொழில்நுட்பத்தில் இளங்கலை பொறியியல் அல்லது தரவு அறிவியல் (Data Science) மற்றும் புள்ளிஇயல் படிப்பில் இளங்கலை பட்டம் அல்லது தொடர்புடைய படிப்பில் முதுகலை பட்டம் படித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு மாநில அரசின் பணியாளர் தேர்வு விதிமுறையின் அடிப்படையில் இளம் நெறிஞர் (Young Professional) நியமனம் நடைபெறும்.
மேற்படி தகுதியுள்ள இளம் நெறிஞர் (Young Professional) மாதாந்திர தொகுப்பூதியம் ரூ.50,000/- மட்டும் வழங்கப்படும். தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் 27.01.2025 முதல் 17.02.2025 தேதிக்குள் தங்கள் சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பப் படிவத்தினை புள்ளிஇயல் துணை இயக்குநர். மாவட்டப் புள்ளிஇயல் அலுவலகம், தருமபுரி மாவட்டம் என்ற முகவரிக்கு நேரிலோ / தபால் மூலமாகவோ அனுப்பவும், விரிவான அறிக்கை விவரங்களை தருமபுரி மாவட்ட இணையதள முகவரி https://dharmapuri.nic.in மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.