fbpx

பிரதமர் தொடங்கி வைத்த சூப்பர் சேமிப்பு திட்டம்..!! உடனே இணைந்திருங்கள்..!! ரூ.11 லட்சம் கிடைக்கும்..!!

பிரதமர் மோடி தொடங்கி வைத்த செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் 11,16,815 ரூபாய் வரை சேமிக்க வழி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 22 ஆம் தேதி பிரதமர் மோடியால் செல்வமகள் சேமிப்பு திட்டம் கொண்டு வரப்பட்டது. பெண்கள் உயர் கல்வி, திருமணம், மருத்துவ தேவைகளுக்காக இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது. மத்திய அரசும், மாநில அரசும் பல்வேறு சேமிப்பு திட்டங்களை கொண்டு வந்துள்ளது. அதில், ஒரு சேமிப்பு திட்டம்தான் இந்த செல்வமகள் சேமிப்பு திட்டம் ஆகும். பெண்களின் எதிர்காலத்தை மனதில் வைத்து குறைந்த சேமிப்பு ஆனால் நிறைய வருமானம் வரும் வகையில் இந்த திட்டம் உருவாக்கப்பட்டது.

இந்த திட்டத்தில் நிறைய லாபம் வட்டி மூலம் கிடைப்பதால் பெற்றோர்கள் பலரும் இதை விரும்புகின்றனர். இதனால் அதிக அளவில் இந்த திட்டத்தில் முதலீடு செய்து வருகின்றனர். பிரதமர் மோடி தொடங்கி வைத்த செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் 11,16,815 ரூபாய் வரை சேமிக்க வழி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. 10 வயதுக்கு குறைவாக இருக்கும் பட்சத்தில் பெற்றோர்கள், பாதுகாவலர்கள் பெயரில் திட்டத்தை தொடங்கலாம். பெண் குழந்தைகள் வயது 10ஐ கடந்ததும் அவர்கள் பெயருக்கு திட்டத்தை மாற்றிக்கொள்ள முடியும். 15 ஆண்டுகள் வரை இந்த திட்டத்தில் டெபாசிட் செய்ய முடியும். 21 ஆண்டுகளுக்கு பின் டெபாசிட்டை பெற்றுக்கொள்ள முடியும்.

இத்திட்டத்தில் 1,000 ரூபாய் முதலீடு செய்ய முடியும். 2 ஆயிரம் ரூபாயும் முதலீடும் செய்ய முடியும். இந்த சேமிப்பு திட்டத்தில் 8 சதவிகிதம் வட்டி கொடுக்கப்படுகிறது. இதனால் நீங்கள் 2 ஆயிரம் ரூபாயை 15 ஆண்டுகள் முதலீடு செய்தால் 21 ஆண்டுகள் வட்டியோடு சேர்த்து உங்களுக்கு 11.16 லட்சம் ரூபாய் கிடைக்கும். இந்த திட்டத்தில் குறைந்தபட்ச தொகை 1000 ரூபாய் ஆகும். அருகில் இருக்கும் அஞ்சல் அல்லது வங்கிகளில் இந்த தொகையை செலுத்தி கணக்கை தொடங்கிக் கொள்ளலாம். பெண்ணுக்கு திருமணம் ஆகும் வரை பணத்தை செலுத்த முடியம். அதிகபட்சம் 1.5 லட்சம் வரை மாதம் வைப்பு தொகையாக செலுத்த முடியும்.

இந்த சேமிப்பு தொகையை வருமான வரி ரிட்டர்ன் செலுத்தும் போது காட்டி வருமான விலக்கு பெற முடியும். உதாரணமாக 1.5 லட்சம் ரூபாய் மாதம் காட்டுகிறீர்கள் என்றால் அதற்கு விலக்கு பெற்றுக்கொள்ள முடியும். வருமான வரிச் சட்டப் பிரிவு 80C-ன் கீழ் வரி விலக்கு அளிக்கப்படுகிறது. இந்த சேமிப்பு திட்டத்தில் இடையில் உங்களுக்கு இடையில் பணம் தேவைப்படுகிறது. உதாரணமாக பெண்ணின் மேல்படிப்பிற்கு பணம் தேவைப்படுகிறது என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் அதுவரை சேமித்து வட்டியோடு இருக்கும் பணத்தில் 50 சதவிகிதத்தை அதாவது பாதியை பெற்றுக்கொள்ள முடியும். அதற்கு தேவையான ஆவணங்களை நீங்கள் கொடுக்க வேண்டும். அதேபோல் மேலும் இத்திட்டத்தின் கீழ் பெறப்படும் கூடுதல் வட்டிக்கும் கூட வருமான வரி செலுத்த தேவையில்லை.

Chella

Next Post

பெரும் சோகம்..!! தீவிர சிகிச்சைப் பிரிவில் பிரபல பாடகி அனுமதி..!! கவலையில் ரசிகர்கள்..!!

Thu Jun 29 , 2023
உலகில் தினம் தினம் எத்தனையோ பாடகர்கள் வந்து கொண்டு தான் இருக்கின்றனர். அதில் ஒரு சிலரை மட்டும் நம்மால் என்றுமே மறக்க முடியாது. அவ்வாறான பாடகர்களில் ஒருவர் தான் மடோனா. இவர் ‘லைக் எ பிளேயர், ட்ரூ ப்ளூ, மடோனா, மேடம் எக்ஸ்’ என பல ஹிட் ஆல்பங்களை கொடுத்துள்ளார். இவரைக் குயின் ஆஃப் பாப் எனக் கூறி 80-களில் இருந்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இவர், பாடலாசிரியர் மட்டுமல்லாது […]
பெரும் சோகம்..!! தீவிர சிகிச்சைப் பிரிவில் பிரபல பாடகி அனுமதி..!! கவலையில் ரசிகர்கள்..!!

You May Like