விலை உயர்ந்த ஷூவாக இருந்தாலும் சரி, விலை மலிவான ஷூவாக இருந்தாலும் சரி, அதனை சுத்தமாக வைத்துக் கொள்வது அவசியம். சரியாக சுத்தம் செய்து பராமரிக்காவிட்டால், தூசி படிந்து விடும். இது உங்கள் ஷூவை பாழாக்கி விடலாம். மெட்டிரீயலைப் பொறுத்து நாம் வாஷிங் மெஷினில் புரோகிராம் செய்து துணிகளை எல்லாம் துவைப்பவது போலவே, கேன்வாஸ் மற்றும் அத்லெட்ஸ் பயன்படுத்தும் ஷூக்களைக் கூட வாஷிங் மெஷினில் போட்டு துவைக்க முடியும். இது குறித்த விளக்கத்தை தான் இந்தப் பதிவில் பார்க்கப் போகிறோம்.
ஷூ லேஸைக் கழற்றவும் : லேஸ் ஷூ என்றால், முதலில் ஷூ லேஸைக் கழற்ற வேண்டும். பின்னர், ஷூவை வெது வெதுப்பான தண்ணீரில் போட்டு ஒரு மணி நேரத்துக்கு ஊற விடுங்கள். அடுத்து, உங்கள் கைகளை வைத்து தேய்த்து, தண்ணீர் கொண்டு அலசுங்கள்.
தூசியை அகற்றுங்கள் : அடுத்து, ஒரு பழைய பிரஷ் ஒன்றைக் கொண்டு ஷூவில் படிந்து இருக்கும் தூசி அல்லது அழுக்கை அகற்றி விடுங்கள். ஒவ்வொரு மூளை முடிக்கிலும் பிரஷைக் கொண்டு அழுக்கை நன்றாக சுத்தம் செய்து விடுங்கள்.
கறைகளை நீக்குங்கள் : ஷூவில் உள்ள விடாப்படியான கறைகளை அகற்ற, வினிகர் மற்றும் பேக்கிங் சோடாவை ஒன்றாகக் கலந்து ஒரு பேஸ்ட் போல செய்து கொள்ளுங்கள். பிரஷைக் கொண்டு கறைகள் உள்ள இடத்தில் அந்த பேஸ்ட்டைத் தடவி ஸ்கிரப் செய்யுங்கள். நன்றாக ஸ்கிரப் செய்த பின்னர் அலசி விடவும்.
இன்சோலை வெளியே எடுத்து விடுங்கள் : ஷூவை வாஷிங் மெஷினிற்குள் போடுவதற்கு முன் இன்சோலை வெளியே எடுத்து விட வேண்டும். அதை தனியாக ஈரமான ஸ்பாஞ் அல்லது பாத்திரம் விலக்கும் லிக்விட் கொண்டு நன்றாக கழுவி வைத்துக் கொள்ளுங்கள்.
மெஷ் பேக் பயன்படுத்துங்கள் : உங்கள் ஷூவை மெஷ் பேக் ஒன்றில் போட்டு மெஷினில் போட்டு விடுங்கள். இவ்வாறு செய்தால் தான், உங்கள் மெஷின் பாதுகாப்பாக இருக்கும்.
டவல் : பழைய டவல் ஒன்றை எடுத்து ஷூக்களுடன் மெஷினில் போடுங்கள். இது மெஷினின் எடையை சமநிலைப் படுத்த உதவும். அடுத்து, லிக்விட் டிட்டர்ஜெண்ட் சேர்த்து, ஜென்டில் மோடில் வைத்து விடுங்கள்.
உலர விடுங்கள் : சுத்தம் செய்வது முடிந்தவுடன், நீங்கள் அதனை உலர வைக்க வேண்டும். காகிதங்களை சுருட்டி ஷூவுக்குள் வைத்து அதன் வடிவத்தை சரி செய்து கொண்டு, நன்றாக காற்றோட்டம் உள்ள சூரிய ஒளி நிறைந்த இடத்தில் வைத்து விடுங்கள். 1 அல்லது 2 மணி நேரத்திற்குள் அது காய்ந்து விடும். நீங்கள் புதிது போன்ற உங்கள் ஷூக்களைப் போட்டு வெளியே செல்ல தயார் ஆகி விடலாம்.