கோவை மாவட்டம் டி..நல்லிக்கவுண்டன் பாளையத்தை சேர்ந்த ரமேஷ் (42) தனியார் தொழிற்சாலை ஒன்றில் இவர் பணியாற்றி வருகிறார் இவருடைய மனைவி ரம்யா (30) 2 குழந்தைகள் இந்த தம்பதிகளுக்கு இருக்கின்றன ரம்யா சின்னத்திரையில் துணை நடிகையாக நடித்து வருகிறார். அவ்வப்போது நல்ல கவுண்டம்பாளையம் கிராமத்திற்கு ரம்யா வந்து செல்வது வழக்கம் என்று கூறப்படுகிறது.
இத்தகைய சூழ்நிலையில், கலந்த 19ஆம் தேதி ரமேஷும் ரம்யாவும் இருசக்கர வாகனத்தில் முத்து ஒரு சாலையில் இருந்து நல்ல கவுண்டன் பாளையம் கிராமத்திற்கு சென்று கொண்டிருந்த போது அவர்களை வழிமறித்த ஒரு நபர் ரமேஷை கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். அதன் பிறகு ரமேஷை கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தார் ரம்யா.
பொள்ளாச்சி தாலுகா காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ரம்யா தன்னுடன் நடித்து வரும் சின்னத்திரை துணை நடிகரான பீளமேடு டேனியல் சந்திரசேகர் மூலமாக கணவரை தாக்கி இருக்கிறார் என்பது தெரிய வந்தது. இருவரையும் நேற்று முந்தினம் காவல்துறையினர் கைது செய்தனர்.
காவல்துறையினர் தரப்பில் இது தொடர்பாக தெரிவித்ததாவது, சின்னத்திரையில் நடிக்க வேண்டாம் என்று ரமேஷ் கண்டித்து வந்திருக்கிறார். ஆகவே ரமேஷின் வீட்டை விற்பனை செய்வதிலும் கணவன் மனைவிக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்திருக்கிறார்கள்.