fbpx

சீனாவில் வாடகை அப்பா!… அறிய வகை சேவை அறிமுகம்!

வடகிழக்கு சீனாவின் லியோனிங் மாகாணத்தில் உள்ள ஒரு குளியல் இல்லம் (Bath House) ஒன்றில் வாடகை அப்பா என்ற சேவையை அறிமுகம் செய்துள்ளது.

‘Rent a Dad’ என பெயரிடப்பட்டுள்ள இந்த சேவை மூலம், தாயுடன் வரும் மகன்களை குளிக்க வைப்பது, கவனித்துக் கொள்வது போன்றவற்றை வாடகை அப்பாக்கள் செய்வார்கள். அதாவது, தாய் குளிக்கும் வரை இந்த குழந்தைகளை வாடகை தந்தைகள் கவனித்துக் கொள்கிறார்கள். மேலும், அந்த குழந்தைகளுக்கு உடை மாற்றி விடுவது என அனைத்தையும் கவனித்து கொள்கிறார்கள். குறிப்பாக, இந்த சேவை இலவசமாக வழங்கப்படுகிறது. இந்நிலையில், இந்த சேவைக்கு பலர் வரவேற்ப்பு அளித்துள்ளனர்.

பெண்களுக்கு மட்டும் உள்ள பகுதிகளில், சிறுவர்கள் நுழைவதை தடுக்க இச்சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒரு பெண் தன் மகனுடன் இங்கு வந்தால், தன் மகனை வாடகை தந்தை என அழைக்கப்படும் நபரிடம் ஒப்படைத்து, நீச்சல் குளத்தில் சுதந்திரமாக நீந்தி மகிழலாம். வாடகைத் தந்தை அதுவரை உங்கள் மகனைக் கவனித்து, ஆண்கள் குளிப்பதற்கு அழைத்துச் செல்வார் என்று அந்த குளியல் இல்லம் (Bath House) தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அங்கு ஆண் மற்றும் பெண் சிரவர்களுக்கென தனித்தனி அறைகளையும், உணவு, பானங்கள், மசாஜ்கள், பொழுதுபோக்கு மற்றும் பிற வசதிகளை அனுபவிக்கக்கூடிய யுனிசெக்ஸ் லவுஞ்ச் பகுதியையும் வழங்குகின்றதாம்.

Kokila

Next Post

அசத்தல்.‌‌..! 45 முதல் 60 வயதுக்குட்பட்ட திருமணம் ஆகாத நபர்களுக்கு மாதம் ரூ.2,750 பென்ஷன் திட்டம்...! முதல்வர் அறிவிப்பு...

Fri Jul 7 , 2023
ஹரியானா மாநிலத்தில் 45 முதல் 60 வயதுக்குட்பட்ட திருமணம் ஆகாதவர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியமாக ரூ.2,750 வழங்கப்படும். ஹரியானா மாநிலத்தில் 45 முதல் 60 வயதுக்குட்பட்ட திருமணம் ஆகாதவர்களின் ஆண்டு வருமானம் ரூ.1.8 லட்சத்துக்கும் குறைவாக இருந்தால், அவர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியமாக ரூ.2,750 வழங்கப்படும். இந்த பயனாளிகள் 60 வயதை அடைந்தவுடன், அவர்கள் தானாகவே முதியோர் ஓய்வூதியத்தைப் பெறத் தகுதியானவர்கள் என கல்யாணம் முதல் அமைச்சர் மனோகர் தெரிவித்துள்ளார். இது குறித்து […]
லட்சக்கணக்கில் புரோக்கர் கமிஷன்..!! திருமணம் முடிந்தும் சிங்கிளாக சுத்தும் இளைஞர்..!!

You May Like