fbpx

“தாயுடன் ரகசிய உறவு..” ஆத்திரத்தில் நண்பனை வெட்டி சாய்த்த 17 வயது சிறுவன்.! வழக்கு விசாரணையில் ஏற்பட்ட ட்விஸ்ட்.!

மகாராஷ்டிரா மாநிலத்தில், தனது தாயுடன் தகாத உறவில் பக்கத்து வீட்டில் வசிக்கும் தனது நண்பன் இருப்பதாக எண்ணி, 17 வயது சிறுவன் கொடூரமாக அவரை கொலை செய்திருக்கிறார். ஆனால் துரதிஷ்டவசமாக இறந்த நபருக்கும் அவரது தாய்க்கும் எந்த தவறான உறவும் இருக்கவில்லை என்பது விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. கொலை செய்த சிறுவனை சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இது அப்பகுதியினரை அதிர்ச்சியால் ஆழ்த்தியது.

கடந்த சனிக்கிழமை அன்று, மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள, பாடா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வாட்ஜி கிராமத்தில், ரஞ்சித் டி மாலி (22) என்பவரின் சடலம் ஒரு வயலில் கண்டெடுக்கப்பட்டது. இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணையை தொடங்கினர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.

இறந்தவரின் அண்டை வீட்டில், 34 வயதுடைய ஒரு பெண் கணவனைப் பிரிந்த நிலையில், தனது 17 வயது மகனுடன் வசித்து வந்தார். இறந்த ரஞ்சித், அந்த ஊரில் பல பெண்களுடன் தொடர்பு வைத்திருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் அந்த 17 வயது சிறுவனும், ரஞ்சித்தும் நண்பர்களாக பழகி வந்தனர். இதனால் ரஞ்சித் அடிக்கடி இவர்களின் வீட்டுக்கு வருவதுண்டு.

தனது தாய்க்கும், ரஞ்சித்துக்கும் இடையே ஏதோ தவறான தொடர்பு இருப்பதாக அந்த சிறுவன் சந்தேகம் அடைந்தார். அவர்களை உளவு பார்த்து இருக்கிறார். பின்னர் இருவருக்குள்ளும் தவறான உறவு இருக்கிறது என்பதை நம்பிய அவர், இன்னொரு நண்பனிடம் தனது அரிவாளை கொடுத்து வயல்வெளி வேலைக்காக கூர்மைப்படுத்த சொல்லி இருக்கிறார்.

பின்னர் அந்த அரிவாளால் ரஞ்சித்தை சரமாரியாக வெட்டி சாய்த்து இருக்கிறார். பின்பு ஒன்றும் நடக்காதது போல் தனது வீட்டிற்கு அந்த சிறுவன் வந்திருக்கிறார். அந்த சிறுவனிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், தான் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

காவல்துறையினர் இது குறித்த விசாரணையை அந்த பெண்ணிடமும் மேற்கொண்டனர். ரஞ்சித் மற்றும் அந்த பெண்ணுடைய மொபைல் அழைப்பு பதிவுகளும் சரிபார்க்கப்பட்டன. பின்னர் விசாரணையில் அவர்கள் இருவருக்குள்ளும் எந்த தவறான உறவும் இருக்கவில்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டது. வதந்திகளை நம்பி, அந்த சிறுவன் இவ்வாறு கொலை செய்துவிட்டதாக விசாரணை குழு அதிகாரி, டோங்கரே கூறினார்.

கொலை செய்த அந்த சிறுவனை, சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த திட்டமிட்டுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

Next Post

"ஆளுநரை மிரட்டுகிறார்கள்.. திமுக திருடிய 8,500 கோடி பணத்தை திருப்பித் தர சபாநாயகர் கேட்கலாம்" - அப்பாவு உரைக்கு அண்ணாமலை பதிலடி.!

Mon Feb 12 , 2024
தமிழக அரசின் பட்ஜெட் அடுத்த வாரம் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் இந்த வருடத்தின் முதல் சட்டப்பேரவை கூட்டம் இன்று தொடங்கியது. அரசு மரபுப்படி ஆளுநர் உரை பின் சட்டசபை கூட்டங்கள் தொடங்கும். இந்நிலையில் தமிழக அரசு தயாரித்த உரையை ஆளுநர் ரவி நிராகரித்தார். மேலும் 4 நிமிடங்கள் மட்டுமே உரை நிகழ்த்திய அவர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்புச் செய்தார். இது தமிழக அரசியல் வட்டாரங்களில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி […]

You May Like