fbpx

நடத்தையில் சந்தேகம்….! காதல் மனைவியை கதற கதற கொலை செய்த கணவன் நாகையில் பரபரப்பு…..!

நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா தகட்டூர் பெத்தாச்சி காட்டைச் சேர்ந்தவர் சோமசுந்தரம் என்பவரின் மகன் முரளி என்கின்ற சுரேஷ் (32) இவர் சென்னையில் தங்கி கார் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மீனா (27) இவரும் சுரேஷும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிகளுக்கு ஒரு ஆண், ஒரு பெண் என 2 குழந்தைகள் இருக்கின்றன இந்த நிலையில் மனைவி மீனாவின் நடத்தையில் சுரேஷிற்கு திடீரென்று சந்தேகம் எழுந்தது. இதனால் அடிக்கடி மனைவியிடம் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது.

இந்த நிலையில், சுரேஷ் கடந்த 4ம் தேதி காலை சென்னையிலிருந்து வீட்டிற்கு வந்தார். அதன் பிறகு மாமியார் வீட்டுக்கு சென்று மனைவி மற்றும் குழந்தைகளை பெத்தாச்சி காட்டில் உள்ள தன்னுடைய வீட்டிற்கு அழைத்து வந்தார் பிறகு வீட்டுக்கு வந்தவுடன் மீனாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவருடன் தகராறில் ஈடுபட்டிருக்கிறார்.

வாக்குவாதம் அதிகரித்ததை தொடர்ந்து ஆத்திரம் கொண்ட சுரேஷ், வீட்டில் இருந்த தேங்காய் உரிக்க பயன்படுத்தப்படும் இரும்புக் கம்பியை எடுத்து மனைவியை சரமாரியாக தாக்கி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார் மீனாவின் அலறல் சட்டம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தார்கள் வந்து பார்த்தபோது அவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அவரை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்து விட்டனர்.

அதோடு இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு பிறந்த காவல்துறையினர் மீனாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து சுரேஷை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Post

எரிமலை வெடித்து சிதறும் அபாயம்..!! பொதுமக்கள் வெளியேற்றம்..!! விமானங்கள் பறக்க தடை..!!

Wed Jun 7 , 2023
பசிபிக் நெருப்பு வளைய பகுதியில் நாடு என்ற சிறப்பை பெற்றிருந்தாலும் இயற்கை சீற்றத்தால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகளில் ஒன்றாக பிலிப்பைன்ஸ் உள்ளது. நிலநடுக்கம், புயல், வெள்ளம் போன்ற பாதிப்புகளை எதிர்கொண்டு வருகிறது. அதேநேரத்தில் பிலிப்பைன்ஸ் நாட்டில் எரிமலைகளும் அதிகளவில் உள்ளன. இதனால் பிலிப்பைன்ஸ் நாட்டில் அடிக்கடி எரிமலை சீற்றம் ஏற்படுகிறது. இதனையொட்டி, பிலிப்பைன்சின் எரிமலை மற்றும் நிலநடுக்கவியல் நிறுவனம் லூசன் தீவில் பல ஆய்வுகளை மேற்கொண்டது. இந்த ஆய்வின் முடிவில் […]

You May Like