fbpx

இனிப்பான செய்தி!. பொங்கலுக்கு ட்ரிபுள் ஜாக்பாட்.. ரேஷன் அட்டைதாரர்களுக்கு 3 இலவசம்!. என்ன தெரியுமா?

Pongal: தமிழர் திருநாளம் தை திருநாளை ஒட்டி தமிழ்நாடு அரசு ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கப் பணம் வழங்கி வருகிறது. தமிழ்நாடு மக்கள் மகிழ்ச்சியாக பொங்கல் விழாவை கொண்டாட ரேஷன் கடையில் பச்சரிசி, வெள்ளம், சர்க்கரை உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு பரிசாக வழங்கப்படும்.

கொரோனா காலத்துக்கு முன்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு மட்டும் வழங்கப்பட்டு வந்த நிலையில், கடந்த சில ஆண்டு முதல் ரூ.1000 ரொக்கமும் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த 1000 ரூபாய் மற்றும் பொங்கல் பரிசுத் தொகுப்பு மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. ஆனால் இந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்புடன் கூடிய 1000 ரூபாயும் மற்றும் மகளிர் உரிமைத்தொகையும் சேர்த்து மொத்தம் ரூ.2000 வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏனென்றால் பெரும்பாலான குடும்பங்களில் பெண்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை என்ற பெயரில் மாதம்தோறும் 1000 ரூபாய் நிதி உதவி கொடுக்கப்பட்டு வருகிறது.

எனவே இந்தமுறை தைப்பொங்கல் பண்டிகையின் போது கலைஞர் மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 மற்றும் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் கூடிய ரூ.1000 என ரூ.2000 வழங்க வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இன்னும் அதிகாரபூர்வமாக எந்த தகவலும் இல்லை. பொங்கல் திருநாளை முன்னிட்டு வழங்கப்பட உள்ள இலவச வேஸ்ட்டி, சேலைகள் அனைத்தும் தயார் செய்யப்பட்டு அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்படும் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் சேர்த்து இவற்றை வழங்குவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. எனவே இந்தமுறை கலைஞர் மகளிர் உரிமைத்தொகை ரூ.1000, பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் 1000 ரூபாய், இலவச வேட்டி சேலைகள் வழங்கப்படும் எனத் தெரிகிறது.

பொங்கல் திருநாளை முன்னிட்டு ஒவ்வொரு மாதமும் 15 ஆம் தேதி வழங்கப்பட்டு, வரும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகையினை இந்த மாதம் பொங்கல் திருநாளுக்கு முன்னதாக, அதாவது மாத தொடக்கத்திலேயே பெரும்பாலும் வரவு வைக்கப்படும் அல்லது 10 ஆம் தேதிக்கு முன்னதாகவே வரவு வைக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

Readmore: லக்னோ வங்கி கொள்ளை!. போலீஸ் என்கவுண்டரில் 2பேர் பலி!. 4 பேர் கைது; பணம், நகைகள் மீட்பு!.

Kokila

Next Post

கணவன் வீட்டில் குடும்பத்தினர், தோழிகள், உறவினர்களுடன் செட்டிலான புதுமணப்பெண்..!! இதெல்லாம் ரொம்ப கொடுமை..!! விவாகரத்து வழங்கியது ஐகோர்ட்..!!

Tue Dec 24 , 2024
The trial court's refusal to grant a divorce in favor of the husband in this case was highly erroneous.

You May Like