fbpx

மக்களே…! தீபாவளி முன்னிட்டு ஆவினில் குறைந்த விலையில் இனிப்பு வகைகள் விற்பனை…! விலை பட்டியல் இதோ…

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆவினில் சிறப்பு இனிப்பு வகைகள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

இது குறித்து வேலூர் மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; தமிழக அரசின் ஆவின் நிறுவனம் மூலம் 2023ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்பு வகைகள் அனைத்தும் தரமாகவும், சுவையாகவும் ஆவின் நெய்யினால் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட உள்ளது. அதன்படி, வேலூர் சத்துவாச்சாரியில் அமைந்துள்ள ஆவின் நிறுவனம் மூலம் நெய் ஒரு லிட்டர் ரூ.700-க்கும், அரை லிட்டர் ரூ.365-க்கும், 200 மி.லி ரூ. 160-க்கும், பால் கோவா 500 கிராம் ரூ.250-க்கும், 250 கிராம் ரூ.130-க்கும் விற்பனை செய்யப்பட உள்ளது.

அதேபோல் மைசூர்பா 500 கிராம் ரூ.270-க்கும், 250 கிராம் ரூ.140-க்கும், மில்க் கேக் 250 கிராம் ரூ. 120-க்கும், நெய் லட்டு 200 கிராம் ரூ.125-க்கும், பட்டர் முறுக்கு 200 கிராம் ரூ.80-க்கும், மிக்சர் 200 கிராம் ரூ.100-க்கும் விற்பனை செய்யப்பட உள்ளது. தீபாவளி சிறப்பு இனிப்பு வகைகள் குறித்த விவரங்களுக்கு 97912 22890, 9486336101 ஆகிய எண்களிலும், மொத்த தேவைக்கு 87786 77795 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். எனவே, பொதுமக்கள் ஆவின் நிறுவனத்தின் தரமான இனிப்பு வகைகளை வேலூர் மாவட்டத்தில் உள்ள ஆவின் பாலகங்கள், ஆவின் சில்லறை விற்பனையாளர்களிடம் இருந்து வாங்கி பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்

Vignesh

Next Post

குட் நியூஸ்...! உயர் கல்வி பயில உதவித்தொகை ரூ.36 லட்சமாக உயர்வு...! தமிழக அரசு அரசாணை...!

Fri Nov 3 , 2023
ஆதிதிராவிடர் நலத்துறை – அயல் நாடு சென்று உயர்கல்வி பயில்வதற்கான கல்வி உதவித்தொகை திட்டம் – 2023-2024 ஆம் ஆண்டிற்கான புதிய அறிவிப்புகள் குடும்ப ஆண்டு வருமானம் ரூ .8 இலட்சத்திற்கு மிகாமல் இருப்பின் கல்வி உதவித்தொகை ரூ .36 இலட்சமும் மற்றும் குடும்ப ஆண்டு வருமானம் ரூ .12 இலட்சத்திற்கு மிகாமல் இருப்பின் கல்வி உதவித்தொகை ரூ.24 இலட்சமும் வழங்க புதிய நெறிமுறைகள் உருவாக்கி ஆணை வெளியிடப்பட்டுள்ளது. இது […]

You May Like