தற்போதெல்லாம் இளம் வயதிலேயே பலருக்கும் மாரடைப்பு ஏற்படுகிறது. மாரடைப்பு வருவதற்கு சில நாட்களுக்கு முன்னரே அசிடிட்டி, சோர்வு, அதிகப்படியான வியர்வை, குறைந்த இரத்த அழுத்தம் என நாம் சாதாரணமாக கடந்து செல்லும் அறிகுறிகள் தோன்றும். இவைகள் மாரடைப்பு வருவதற்கான அறிகுறிகளாகவும் இருக்கலாம்.
அசிடிட்டி என்பது நம் அன்றாட வாழ்வில் சந்திக்கும் ஒரு சாதாரண அசௌகரியம் தான். இருப்பினும் மாரடைப்பு ஏற்படும் நிலையிலும் இதயத்திற்கு செல்லும் இரத்த ஓட்டம் குறைவதால் அசிடிட்டி மற்றும் நெஞ்செரிச்சல் போன்றவை வரும். அதே போல் நீங்கள் குளிர்ச்சியான சூழலில் இருக்கும் போதும் உங்களுக்கு அதிகப்படியான வேர்வை வந்தாலும் நீங்கள் மருத்துவரை அணுகுவது நல்லது. ஏனென்றால் அது உங்கள் இதயம் சரிவர இயங்க போராடுவதற்கு ஒரு அறிகுறி தான். இதயம் தன்னைத்தானே சீராக்கிக்கொள்ள முயற்சிக்கும் போது இந்த அறிகுறைகள் ஏற்படுகிறது.
மாரடைப்பின் போது இடது கை மற்றும் தோள்பட்டையில் வலி வரும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இருப்பினும் சில நேரங்களில் இந்த வலி தாடை, கழுத்து மற்றும் தொண்டை பகுதிக்கும் பரவுகிறது. இதனால் நம் பல் பிரச்சனையாக இருக்கலாம் என கவனிக்காமல் இருந்துவிட கூடாது. அதிகப்படியான சோர்வும் மாரடைப்பு ஏற்பட ஒரு அறிகுறி தான். எளிதான பணிகளை செய்தால் கூட வழக்கத்திற்கு மாறாக சோர்வடைதல் இதயத்திற்கு இரத்தம் ஒழுங்காக செல்லாததற்கான அறிகுறையாக இருக்கலாம்.
இவை அனைத்தையும் விட மிகமுக்கிய அறிகுறி குறைந்த இரத்த அழுத்தம். திடீரென குறைந்த இரத்த அழுத்தம், தலைசுற்றல் மற்றும் மயக்கம் போன்றவை ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது. அவ்வப்போது மருத்துவ பரிசோதனை எடுத்துக்கொள்வது, சத்தான ஆகாரங்களை எடுத்துக்கொள்வது நம்மை பல நோய்களில் இருந்து காக்கும்.
Read more: இந்த ஒரு ஜூஸ் போதும், சொரியாசிஸ் முதல் இதய நோய் வரை எந்த நோயும் உங்களுக்கு வரவே வராது..