சென்னையின் முக்கிய பகுதியான தி.நகர் பகுதியில் ஹைடெக் விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்த பிரபல பாலியல் புரோக்கரை கைது செய்து இருக்கிறது காவல்துறை. சென்னை தி.நகரில் உள்ள நரசிம்மா சாலையில் அமைந்துள்ள சர்வீஸ் அபார்ட்மெண்டில் சந்தேகத்திற்கு இடமான வகையில் ஆள் நடமாட்டம் இருப்பதாக விபச்சார தடுப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனைத் தொடர்ந்து அப்பகுதிக்கு அதிரடியாக சென்ற காவல்துறை தீவிரமான தேடுதல் வேட்டையில் இறங்கியது. காவல்துறையின் தேடுதல் வேட்டையின்போது அங்கிருந்த வீடு ஒன்றில் ரகசியமாக ஹைடெக் விபச்சாரம் செய்து வந்தது தெரிந்தது. இதனைத் தொடர்ந்து அவர்களை சுற்றி வளைத்த போலீசார் பிரபல பாலியல் ப்ரோக்கரான திருவாரூர் மாவட்டத்தைச் சார்ந்த கார்த்திகேயன்(26) என்பவரை கைது செய்தனர்.
இவரிடம் நடத்திய விசாரணையில் இந்த இளைஞர் மெட்ராஸ் ரீகிரியேஷன் கிளப் உரிமையாளர் இளையராஜாவின் உதவியாளர் என தெரிய வந்திருக்கிறது. மெட்ராஸ் கிளப்பிற்கு வரும் உறுப்பினர்களுக்கு இளம் பெண்களின் புகைப்படங்களை காட்டி அதன் மூலம்
தி.நகரில் உள்ள சர்வீஸ் அபார்ட்மெண்டில் வைத்து இவர்கள் விபச்சாரம் செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இந்த கும்பலிடம் இருந்த இளம் பெண் ஒருவர் மீட்கப்பட்டார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறை விபச்சார தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் ஸ்ரீனிவாசன் தலைமையில் தலைமறைவாக உள்ள மெட்ராஸ் ரீகிரியேசன் கிளப்பின் உரிமையாளர் இளையராஜா மற்றும் பெண் புரோக்கர் பானு ஆகியோரை தீவிரமாக தேடி வருகின்றனர்.