fbpx

டி20 இறுதிப்போட்டி நேரம் மாற்றம்…

நாளை நடைபெற உள்ள பாகிஸ்தான்-இங்கிலாந்து இடையேயான டி20 உலக கோப்பை இறுதிச்சுற்று போட்டிக்கான நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பாகிஸ்தான்-இங்கிலாந்து மோதும் டி.20 உலக கோப்பை போட்டி இறுதிச் சுற்றுப் போட்டி நாளை நடைபெற உள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் மழை வெளுத்து வாங்குகின்றது. அரையிறுதியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. இதையடுத்து இங்கிலாந்துடன் மோதும் வாய்ப்பை பெற்றது.

நாளை இறுதிச் சுற்று நடைபெற உள்ளது. மெல்போர்னில் மழை காரணமாக நாளை ஆட்டம் தடைபட்டால் விட்ட இடத்தில் இருந்து நாளை மறுநாள் ஆட்டம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திங்கள் கிழமையும்மழை நீடிக்கும்பட்சத்தில் இந்திய நேரப்படி 9.30 மணி அளவில் போட்டி நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2010ம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து வெற்றிபெற்றது. ஒருவேளை இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மீண்டும் உலக கோப்பையை இங்கிலாந்து தட்டிச் செல்லும். இந்திய நேரப்படி நாளை மதியம் 1.30க்கு போட்டி தொடங்கும். ஒரு லட்சம் பேர் அமரும் வகையில் அமைக்கப்பட்டுள்ள மைதானத்தில் ஏற்கனவே டிக்கெட்டுகள் தீர்ந்துவிட்டது. இந்நிலையில் அடுத்த 2 நாட்கள் கனமழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானும் இங்கிலாந்தும் இதுவரை 28 போட்டிகளில் மோதி உள்ளது. 18 முறை இங்கிலாந்தும் 9 முறை பாகிஸ்தானும் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்டது. கடைசியாக மோதிய 5 போட்டிகளில் இங்கிலாந்து 3ல் வென்றுள்ளது. டி20 உலக கோப்பையில் இதற்கு முன் 2 முறை மோதி உள்ளன. 20009ல் இங்கிலாந்தில் நடந்த போட்டியில் 2010ல் வெஸ்ட் இண்டீசில் நடந்த உலக கோப்பை சூப்பர் 8 சுற்றில் பாகிஸ்தானை இங்கிலாந்து வீழ்த்தியுள்ளது. தற்போது 3 வது முறையாக நேருக்கு நேர் மோதுகின்றது.

நானை இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு ரூ.13.30 கோடி ரொக்கப்பரிசு கிடைக்கும். 2-வது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.6.65 கோடி கிடைக்கும். அரையிறுதியில் வெளியேறிய நியூசிலாந்து இந்திய அணிகளுக்கு தலா 4.56 கோடி கிடைக்கும். சூப்பர் 12 சுற்றில் வெளியேறிய 8 அணிகளுக்கும் தலா ரூ.57 லட்சம் வழங்கப்பட உள்ளது.

Next Post

யூடியூபில் டிப்ஸ் பார்த்து கிழங்கை சாப்பிட்டவர் மரணம்!

Sat Nov 12 , 2022
யூடிபில் பளபளக்கும் மேனியையும் ஆரோக்கியத்தையும் பெற செங்காந்தாள் என்ற செடியின் கிழங்கை சாப்பிடலாம் என்ற தகவலை பார்த்து சாப்பிட்டவர் மரணம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்துள்ள கிராமம் மின்னூர். இப்பகுதியைச் சேர்ந்த 25 வயது நபர் லோகநாதன். இவரது நண்பர் நாட்ரம்பள்ளியை சேர்ந்த ரத்தினம் (35) இருவரும் கல் குவாரியில் வேலை செய்து வந்தனர். இந்நிலையில் செங்காந்தாள் என்ற செடியின் கிழங்கை சாப்பிட்டால் மினுமினுக்கும் […]

You May Like