தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான சண்முகப்பிரியன் மரணம் அடைந்துள்ளது தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வந்தவர் டைரக்டர் சண்முகப்ரியன். இயக்குனராக மட்டுமல்லாமல் கதை ஆசிரியர் மற்றும் வசனகர்த்தாவாகவும் விளங்கி வந்தவர் இவர். பிரம்மா வெற்றி விழா சின்னத்தம்பி பெரியதம்பி போன்ற வெற்றி படங்களுக்கு கதை ஆசிரியராகவும் வசனகர்த்தாவாகவும் இருந்திருக்கிறார் சண்முகப்பிரியன்.
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் இவர் திரைப்படத்திற்கு கதை மற்றும் வசனங்கள் எழுதினாலே அந்தப் படங்கள் வெற்றி பெறும் என்ற அளவிற்கு வெற்றிகரமாக வலம் வந்தவர் சண்முகப்ரியன். கதையாசிரியர் மற்றும் வசனகர்த்தா என்பதையும் தாண்டி ஒரு சிறந்த இயக்குனராகவும் இருந்திருக்கிறார் இவர். இவரது இயக்கத்தில் 1990 ஆம் ஆண்டு வெளிவந்த பாட்டுக்கு நான் அடிமை என்ற திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. இந்தத் திரைப்படத்தில் குஷ்பூ, ராமராஜன், ரேகா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். உடல் நலம் சரியில்லாமல் இருந்த டைரக்டர் சண்முகப்ரியன் இன்று மரணம் அடைந்திருக்கிறார், இவருக்கு வயது 69. திரையுலகினர் மறைந்த இயக்குனர் சண்முகப்ரியனுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.