fbpx

மாணவர்களே… மாதம் தோறும் ரூ.1,500 உதவித்தொகை…! தேர்வு அடுத்த மாதம் 15-ம் தேதி தான் என அரசு அறிவிப்பு…

தமிழ்மொழி இலக்கிய திறனறிவு தேர்வு அக்டோபர் 15-ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பள்ளி மாணவர்களின் அறிவியல், கணிதம் சார்ந்த ஒலிம்பியாய்டு தேர்வுகளுக்குப்பெருமளவில் தயாராகி பங்கு பெறுவதைப்போன்று தமிழ் மொழி இலக்கியத்திறனை மாணவர்கள் மேம்படுத்திக்கொள்ளும் வகையில் 2022-2023-ம் கல்வியாண்டு முதல் தமிழ் மொழி இலக்கியத்திறனறிவுத்தேர்வு நடத்தப்படவுள்ளது. இத்தேர்வில் 1,500 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை மூலம் மாதம் ரூபாய் 1,500 வீதம் இரண்டு ஆண்டுகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்.

இத்தேர்வில் 50 விழுக்காடு அரசுப்பள்ளி மாணவர்களும் , மீதமுள்ள 50 விழுக்காட்டிற்கு அரசுப்பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட பிற தனியார் பள்ளி மாணவர்களும் தேர்வு செய்யப்படுவர். மாநிலம் முழுவதும் தமிழ் மொழி இலக்கியத் திறனறிவுத்தேர்வு அக்டோபர் 1-ம் தேதி நடத்தப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்திருந்தது. ஆனால் இந்த தமிழ்மொழி இலக்கிய திறனறிவுத் தேர்வு அக்டோபர் 15-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது..

Vignesh

Next Post

2 நிமிடம் போதும்... ஆன்லைன் மூலம் உங்க ஆதார் முகவரியை நீங்களே மாற்றம் செய்யலாம்.…! எப்படி தெரியுமா...?

Thu Sep 29 , 2022
ஆன்லைன் மூலம் உங்களுடைய ஆதார் அட்டையில் முகவரியை மாற்றம் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம். ஆதார் அட்டை என்பது எரிவாயு இணைப்புகளை வாங்குவது, முதலீடு செய்வது, வாக்கு செலுத்துவது, ஓய்வூதிய பெறுவது, போன்ற பல்வேறு சேவைகளைப் பெற பயன்படுத்தப்படும் மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்றாகும். எனவே அனைத்து விவரங்களும் புதுப்பிக்கப்பட்டு அட்டையில் சரியாக இருப்பது முக்கியம். ஆதார் அட்டையை UIDAI இணையதளத்திற்குச் சென்று அல்லது பதிவு மையம் அல்லது ஆதார் […]

You May Like