fbpx

தொடரும் அட்டூழியம்…!எல்லை தாண்டி கச்சத்தீவு அருகே மீன் பிடித்த 32 மீனவர்கள் தமிழக கைது…!

கச்சத்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேரை எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி கைது செய்த இலங்கை கடற்படை, அவர்களது 3 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது.

ராமேஸ்வரம், உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித் தொழிலில் ஈடுபட்டதாகக் கூறி, இலங்கை கடற்படையினர் கைது செய்வதும், இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதலமைச்சர், கடிதம் எழுதுவதும் தொடர் கதையாகி வருகிறது.

இந்த நிலையில் இன்று கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேரை எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி கைது செய்த இலங்கை கடற்படை, அவர்களது 3 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது. தலைமன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்று விசாரணை செய்துள்ளது. மீனவர்களின் 5 படகுகளையும் பறிமுதல் செய்தது இலங்கை கடற்படை. கைது செய்யப்பட்ட மீனவர்கள் முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அவர்களை சிறையில் அடைக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.

English Summary

Tamil Nadu arrests 32 fishermen for fishing across border near Katchatheevu

Vignesh

Next Post

நடுக்கடலில் அதிர்ச்சி!. கப்பலில் நோரோ வைரஸ் பாதிப்பு!. சுருண்டு விழும் பயணிகள்!.

Sun Feb 23 , 2025
Shock in the middle of the sea!. Norovirus infection on the ship!. Passengers collapse!.

You May Like