பீகார் தலைநகர் பாட்னாவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை தனி விமானத்தில் செல்ல உள்ளார்.
வரும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற பாஜக அனைத்து திட்டங்களையும் தீட்டி வருகிறது. பாஜகவை எதிர்க்க வலுவான எதிர் அணியை உருவாக்கும் நோக்கில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணி அமைப்பது குறித்து தீவிரமாக பேசி வருகின்றனர்.
இதுதொடர்பாக பிகார் முதல்வர் நிதிஷ்குமார் பல்வேறு மாநில முதல்வர்களை சந்தித்து மக்களவைத் தேர்தலில் பாஜகவிற்கு எதிரான கூட்டணி குறித்து பேசி வருகிறார். அந்த வகையில் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையில் நாளை எதிர் கட்சிகளின் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தனி விமானம் மூலம் பீகார் செல்ல உள்ளார். இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி , அகிலேஷ் யாதவ் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.