fbpx

ஓணம் பாண்டிகையொட்டி மலையாளத்தில் வாழ்த்து சொன்ன தமிழக முதல்வர் ஸ்டாலின்…

கேரளாவில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஒன்று ஓணம் பண்டிகை. கேரள மக்கள் இந்த பண்டிகையி கொண்டாடி வருகிறார்கள். இன்று ஓணம் பண்டிகை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர். ஓணம் பண்டிகை கேரளாவில் மட்டுமல்லாது தமிழ்நாட்டில் சென்னை, நீலகிரி, கோவை, கன்னியாகுமரி, நாகர்கோவில் பகுதிகளில் வசிக்கும் மலையாள மொழி பேசும் மக்களால் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை, கன்னியாகுமரி, நீலகிரி மாவட்டங்களில் இன்று உள்ளூர் விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஓணம் பண்டிகையொட்டி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மலையாளத்தில் பேசி வீடியோ வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது பதிவில் “நாம் பரஸ்பர அன்பும் நல்லிணக்கமும் கொண்ட தேசமாக மாறி அனைவரையும் சமமாகப் பார்ப்போமாக. பூக்கள், விருந்துகள் மற்றும் மகிழ்ச்சி நிறைந்தது” என்று பதிவிட்டுள்ளார்.

Kathir

Next Post

இந்த விருதுக்கு நீங்கள் தகுதியானவரா..? 15ஆம் தேதிதான் கடைசி..!! ரூ.2 லட்சத்துடன் தங்கமும் கிடைக்கும்..!! எப்படி விண்ணப்பிப்பது..?

Tue Aug 29 , 2023
திருவள்ளுவர் விருதினை பெற விரும்பும் தமிழறிஞர்கள் ஆன்லைனில் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்று தமிழ் வளர்ச்சித்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், 2024-க்கான திருவள்ளுவர் விருதுக்கும், 2023-க்கான 74 விருதுகளுக்கும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதன்படி, திருவள்ளுவர் விருது மகாகவி பாரதியார் விருது, தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது, கி.ஆ.பெ. விசுவநாதம் விருது, பாவேந்தர் பாரதிதாசன் விருது, காமராசர் விருது, பேரறிஞர் அண்ணா விருது பெறுபவர்களுக்கு ரூ.2 லட்சம் ரொக்கம், ஒரு சவரன் தங்கப்பதக்கம், […]

You May Like