fbpx

#Breaking: பிரதமர் தாயார் மறைவிற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் இரங்கல்…!

பிரதமர் மோடியின் தாயார் மறைவிற்கு தமிழக முதல் அமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி நேற்று முன்தினம் உடல்நலக்குறைவு காரணமாக அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி காலமானார். பிரதமர் நரேந்திர மோடி டிசம்பர் 4-ம் தேதி காந்திநகரில் உள்ள வீட்டிற்கு சென்று அவரிடம் ஆசி பெற்றிருந்தார். இன்று அவர் காலமானார். அரசியல் தலைவர்கள் தங்களது இரங்கல் செய்தியை பதிவு செய்து வருகின்றனர்.

பிரதமரின் தாயாரின் மறைவிற்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தனது இரங்கல் செய்தியை தெரிவித்துள்ளார். உங்கள் அன்புக்குரிய தாய் ஹிராபாவுடன் நீங்கள் கொண்டிருந்த உணர்ச்சிபூர்வமான பிணைப்பை நாங்கள் அனைவரும் அறிவோம். தாயை இழந்த துயரம் யாராலும் தாங்க முடியாதது. தாயாரின் இழப்புக்காக வருந்துவதாக தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

நாளை இந்த பகுதிக்கு செல்ல அனுமதி இல்லை - காவல்துறை அறிவிப்பு!

Fri Dec 30 , 2022
புத்தாண்டை முன்னிட்டு நாளை இரவு பொது இடங்களிலும் கடற்கரைகளிலும் பொதுமக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டுமென காவல்துறை அறிவுறுத்தி உள்ளது. இதுகுறித்து தமிழக காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ”நாளை நள்ளிரவு பொதுமக்கள் மோட்டார் வாகனங்களில் தேவையின்றி சுற்றுவதைத் தவிர்க்க வேண்டும். இதேபோல் நாளை இரவும், புத்தாண்டின் போதும் பொதுமக்கள் கடல் நீரில் இறங்கி கொண்டாட்டங்களில் ஈடுபடக்கூடாது. புத்தாண்டு கொண்டாட்டத்தில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் கைது செய்யப்படுவதுடன் அவர்களின் வாகனமும் பறிமுதல் […]

You May Like