டிசம்பர்-2022 மற்றும் ஜனவரி-2023 சந்தா தொகையானது இறுதி செய்யப்பட்டு, அதில் ஏற்கனவே உள்ளூர் கேபிள் டிவி ஆபரேட்டர்களால் செலுத்திய தொகை போக, மீதத் தொகை மட்டுமே செலுத்த வேண்டும்.
இது குறித்து தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் SMS சர்வர்கள் டிசம்பர்-2022, ஜனவரி-2023 மற்றும் பிப்ரவரி-2023 முன்பாதி வரை தொழில்நுட்ப காரணங்களால் இயக்கம் தடைபட்டிருந்தது SMS சர்வர்கள் இயக்கம் சரிசெய்யப்பட்டு, 17.02.2023 முதல் நல்லமுறையில் இயங்கி வருகின்றது.
தற்போது சர்வரில், பிப்ரவரி-2023 மாதத்திற்கான சந்தா கட்டண கேட்புத்தொகை மட்டுமே வைக்கப்பட்டுள்ளது. SMS சர்வர் இயங்காத டிசம்பர்-2022 மற்றும் ஜனவரி-2023 மாதங்களுக்கு உத்தேச சந்தா கேட்புத் தொகை மட்டும் கடந்த மாதங்களில் வைக்கப்பட்டது. தற்பொழுது, SMS சர்வர் இயங்கத் தொடங்கி விட்டதால், டிசம்பர்-2022, ஜனவரி -2023 மாதங்களில் ஆபரேட்டர்களால் திருப்பி கொடுக்கப்பட்ட மற்றும் செயல்படாத செட்டாப் பாக்ஸ்களின் சந்தா தொகை, கேட்புத் தொகையிலிருந்து கழிக்கப்பட்டு சரிசெய்யப்பட்டு வருகிறது.
இந்த இரண்டு மாதங்களுக்கான இறுதி சந்தா கேட்புத் தொகை மார்ச்-2023 முதல் வாரத்தில் SMS சர்வரில் பதிவேற்றம் செய்யப்படும். மேலும், ஆபரேட்டர்கள் உத்தேச கேட்புத் தொகையின் பேரில் ஏற்கனவே செலுத்திய தொகை அவர்களுடைய SMS சர்வர் wallet-ல் வரவு வைக்கப்படும். எனவே, செயல்பாட்டில் இருந்த செட்டாப் பாக்ஸ்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் டிசம்பர்-2022 மற்றும் ஜனவரி-2023 சந்தா தொகையானது இறுதி செய்யப்பட்டு, அதில் ஏற்கனவே உள்ளூர் கேபிள் டிவி ஆபரேட்டர்களால் செலுத்திய தொகை போக, மீதத் தொகை மட்டுமே செலுத்த வேண்டும்