fbpx

Holiday..! 15, 16 & 17 தொடர் விடுமுறை… தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள்…!

நவம்பர் 15 பவுர்ணமி, அதைத் தொடர்ந்து நவ.16, 17 வார இறுதி நாட்கள் என தொடர் விடுமுறை முன்னிட்டு சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

நவம்பர் 15 பவுர்ணமி, அதைத் தொடர்ந்து நவ.16, 17 வார இறுதி நாட்கள் என தொடர் விடுமுறை வருகின்றன. இதை கருத்தில் கொண்டு, சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம்,ஈரோடு, திருப்பூருக்கு 15, 16-ம் தேதிகளில் 705 பேருந்துகளும், கோயம்பேட்டில் இருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர்,பெங்களூருவுக்கு 81 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன

பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு கிளாம்பாக்கத்தில் இருந்து 350, கோயம்பேட்டில் இருந்து 11, மாதவரத்தில் இருந்து 5 பேருந்துகள் என மொத்தம் 1,152 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. பயணிகள் மேம்படுத்தப்பட்ட www.tnstc.in என்ற இணையதளத்தில் அல்லது TNSTC கைபேசி செயலியினை முக்கிய தளங்களில் பதிவிறக்கம் செய்து பயணச்சீட்டை முன்பதிவு செய்து பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary

Tamil Nadu government decides to run special buses from Chennai for the last few days of the holiday

Vignesh

Next Post

பள்ளிக் கல்வித்துறையில் 10,000 போலி ஆசிரியர்களா..? உண்மை என்ன...? தமிழக அரசு விளக்கம்

Thu Nov 14 , 2024
Are there 10,000 fake teachers in the school education sector?

You May Like